தடுப்பணையை தூர்வாருவதால் வனவிலங்கு, மக்களுக்கு இரட்டை மகிழ்ச்சி!| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தடுப்பணையை தூர்வாருவதால் வனவிலங்கு, மக்களுக்கு இரட்டை மகிழ்ச்சி!

Added : அக் 06, 2021
Share
பெ.நா.பாளையம் : கூடலுார் பேரூராட்சிக்கு உட்பட்ட மலையடிவார தடுப்பணையை துார்வாரும் பணி துவங்கியுள்ளது. இதனால், வனவிலங்குகளின் குடிநீர்த் தேவை பூர்த்தியாகி, மனித-வனவிலங்கு மோதல் தவிர்க்கப்படும். நிலத்தடி நீர்மட்டமும் உயரும் என்பதால், வனவிலங்கு ஆர்வலர்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.கோவை புறநகர் வடக்கு பகுதியில் உள்ள மலையோர கிராமங்களில், வன விலங்குகளின்
 தடுப்பணையை தூர்வாருவதால்  வனவிலங்கு, மக்களுக்கு  இரட்டை மகிழ்ச்சி!

பெ.நா.பாளையம் : கூடலுார் பேரூராட்சிக்கு உட்பட்ட மலையடிவார தடுப்பணையை துார்வாரும் பணி துவங்கியுள்ளது.

இதனால், வனவிலங்குகளின் குடிநீர்த் தேவை பூர்த்தியாகி, மனித-வனவிலங்கு மோதல் தவிர்க்கப்படும். நிலத்தடி நீர்மட்டமும் உயரும் என்பதால், வனவிலங்கு ஆர்வலர்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.கோவை புறநகர் வடக்கு பகுதியில் உள்ள மலையோர கிராமங்களில், வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.குறிப்பாக, யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. யானைகள், விவசாய நிலத்துக்குள் புகுவதால், பயிர்கள் சேதமடைகின்றன.

யானைகளின் வரவைக் கட்டுப்படுத்த, பேட்டரி மின் வேலி, அகழி ஆகியவை அமைக்கப்பட்டும், நிரந்தர தீர்வு ஏற்படவில்லை.யானைகளின் நடமாட்டம் அதிகமுள்ள தேவையம்பாளையம், அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில், யானைகளின் வரவை தெரியப்படுத்தும், சைரன் ஒலியுடன் கூடிய சென்சார் கருவி பொருத்தப்பட்டது. இத்திட்டமும் வெற்றிபெறவில்லை.

பெரும்பாலான வன விலங்குகள், குடிநீர்த் தேவைக்காகவே, மலையோர கிராமங்களுக்குள் நுழைகின்றன.எனவே, மலையோர வனப்பகுதியில், வனவிலங்குகளுக்காக தண்ணீர் தொட்டிகள் கட்டப்பட்டன. அவை போதிய பராமரிப்பு இன்றி, உடைந்தும், சிதைந்தும் போய்விட்டன.இதனால், தண்ணீர் தேடி வரும் வன விலங்குகள், குறிப்பாக, யானைகள், வனத்தை ஒட்டியுள்ள பட்டா நிலங்களில் உள்ள பயிர்களை, சேதப்படுத்துகின்றன.

தடுப்பணைவன விலங்குகளின் குடிநீர்த் தேவைக்காக, தேவையம்பாளையம் அருகே உள்ள தடுப்பணையை, துார்வாரி, சீரமைக்க சிறுதுளி அமைப்பு முன்வந்துள்ளது.கூடலுார் பேரூராட்சி அனுமதியுடன், போஸ் நிறுவன நிதி உதவியுடன் தேவையம்பாளையம் தடுப்பணை துார்வாரும் பணி துவங்கியுள்ளது.இதற்கான பூமி பூஜை, தேவையம்பாளையம் கல்பற்றாயன் கோவில் அருகேயுள்ள, தடுப்பணை வளாகத்தில் நடந்தது.

விவசாயிகள் மகிழ்ச்சி

இதுகுறித்து, தேவையம்பாளையம் பகுதி விவசாயிகள் கூறியதாவது:தேவையம்பாளையம் தடுப்பணை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிக்குட்பட்ட பத்து ஏக்கர் நிலத்தை முழுவதுமாக, துார்வாரினால், அண்ணன்- தம்பி பள்ளம், கவுசிகா நதி நீராதாரங்களை பெருக்கும் சிறு ஓடைகள், தேவையம்பாளையம் புதுப்புதுார், பழைய புதுார், காந்திநகர், இடிகரை வரையில் நிலத்தடி நீர் உயரும்.மேலும், வனவிலங்குகளின் குடிநீர்த் தேவையை, இந்த தடுப்பணை பூர்த்தி செய்யும் என்பதால், அவை ஊருக்குள் புகுவது பெருமளவு தடுக்கப்படும்.

இதனால், மனித-வன விலங்கு மோதல் தவிர்க்கப்படும்.இதேபோல, கோவை வடக்கு பகுதியில் மலையோர கிராமங்களில் ஆங்காங்கே உள்ள தடுப்பணைகளை துார்வாரி, வனவிலங்குகளின் தண்ணீர் தாகத்தை தீர்க்க, அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X