கட்டாய மதமாற்றத்தை தடுக்க கடுமையான சட்டம் வேண்டும்| Dinamalar

இந்தியா

'கட்டாய மதமாற்றத்தை தடுக்க கடுமையான சட்டம் வேண்டும்'

Added : அக் 06, 2021
Share
புதுச்சேரி:'கட்டாய மதமாற்றத்தை தடுக்க கடுமையான சட்டத்தை மத்திய அரசு கொண்டு வர வேண்டும்' என விஸ்வ ஹிந்து பரிஷத் வலியுறுத்தி உள்ளது.விஸ்வ ஹிந்து பரிஷத் அகில உலக பொதுச் செயலர் மிலிந்த் பிராண்டே, புதுச்சேரியில் அளித்த பேட்டி:நாடு முழுதும் பல மாநிலங்களில் கட்டாய மத மாற்றம் அதிகரித்துள்ளது. கட்டாய மத மாற்றத்தை தடுக்க, 11 மாநிலங்களில் தடை சட்டம் உள்ளது. கட்டாய மத
 'கட்டாய மதமாற்றத்தை தடுக்க கடுமையான சட்டம் வேண்டும்'

புதுச்சேரி:'கட்டாய மதமாற்றத்தை தடுக்க கடுமையான சட்டத்தை மத்திய அரசு கொண்டு வர வேண்டும்' என விஸ்வ ஹிந்து பரிஷத் வலியுறுத்தி உள்ளது.

விஸ்வ ஹிந்து பரிஷத் அகில உலக பொதுச் செயலர் மிலிந்த் பிராண்டே, புதுச்சேரியில் அளித்த பேட்டி:

நாடு முழுதும் பல மாநிலங்களில் கட்டாய மத மாற்றம் அதிகரித்துள்ளது. கட்டாய மத மாற்றத்தை தடுக்க, 11 மாநிலங்களில் தடை சட்டம் உள்ளது. கட்டாய மத மாற்றத்தை தடுக்க, கடுமையான சட்டத்தை மத்திய அரசு கொண்டுவர வேண்டும்.இதற்காக அனைத்து மாநில அரசுகளையும் சந்தித்து வலியுறுத்தி வருகிறோம்.

புதுச்சேரியிலும் கட்டாய மத மாற்ற தடை சட்டத்தை கொண்டு வர வலியுறுத்துகிறோம். அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானப் பணி, 2023 டிசம்பரில் நிறைவடையும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X