மேக்ஸ்வெல், டிவிலியர்ஸ் போராட்டம் வீண்; கடைசி ஓவரில் பெங்களூரு தோல்வி

Updated : அக் 06, 2021 | Added : அக் 06, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
அபுதாபி : ஐதராபாத் அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் கடைசி ஓவரில் ஏமாற்றிய பெங்களூரு அணி 4 ரன் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியடைந்தது. மேக்ஸ்வெல், டிவிலியர்ஸ் போராட்டம் வீணானது.எமிரேட்சில், ஐ.பி.எல்., 14வது சீசன் நடக்கிறது. நேற்று, அபுதாபியில் நடந்த லீக் போட்டியில் பெங்களூரு, ஐதராபாத் அணிகள் மோதின. இரு அணிகளிலும் மாற்றம் செய்யப்படவில்லை. 'டாஸ்' வென்ற பெங்களூரு
VIVOIPL, RCBvSRH,IPL2021

அபுதாபி : ஐதராபாத் அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் கடைசி ஓவரில் ஏமாற்றிய பெங்களூரு அணி 4 ரன் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியடைந்தது. மேக்ஸ்வெல், டிவிலியர்ஸ் போராட்டம் வீணானது.

எமிரேட்சில், ஐ.பி.எல்., 14வது சீசன் நடக்கிறது. நேற்று, அபுதாபியில் நடந்த லீக் போட்டியில் பெங்களூரு, ஐதராபாத் அணிகள் மோதின. இரு அணிகளிலும் மாற்றம் செய்யப்படவில்லை. 'டாஸ்' வென்ற பெங்களூரு கேப்டன் கோஹ்லி 'பீல்டிங்' தேர்வு செய்தார்.


ஹர்ஷல் அசத்தல்



ஐதராபாத் அணிக்கு அபிஷேக் சர்மா (13) ஏமாற்றினார். முகமது சிராஜ், ஜார்ஜ் கார்டன் வீசிய 3, 4வது ஓவரில் தலா 2 பவுண்டரி அடித்த கேப்டன் வில்லியம்சன் (31), ஹர்ஷல் படேல் 'வேகத்தில்' போல்டானார். டேனியல் கிறிஸ்டியன் வீசிய 15வது ஓவரில் பிரியம் கார்க் (15), ஜேசன் ராய் (44) அவுட்டாகினர். அப்துல் சமத் (1) நிலைக்கவில்லை. ஹர்ஷல் பந்தில் விரிதிமன் சகா (10), ஜேசன் ஹோல்டர் (16) வெளியேறினர்.

ஐதராபாத் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 141 ரன் எடுத்தது. ரஷித் கான் (7) அவுட்டாகாமல் இருந்தார். பெங்களூரு சார்பில் ஹர்ஷல் படேல் 3 விக்கெட் வீழ்த்தினார்.


latest tamil news





அதிர்ச்சி தோல்வி



எட்டக்கூடிய இலக்கை விரட்டிய பெங்களூரு அணிக்கு கேப்டன் விராத் கோஹ்லி (6), டேனியல் கிறிஸ்டியன் (1) ஏமாற்றினர். ஸ்ரீகர் பரத் (12) நிலைக்கவில்லை. அபாரமாக ஆடிய மேக்ஸ்வெல் 25 பந்தில் 40 ரன் (2 சிக்சர், 3 பவுண்டரி) எடுத்து 'ரன் அவுட்' ஆனார். பொறுப்பாக ஆடிய தேவ்தத் படிக்கல் (41) நம்பிக்கை தந்தார். ஷபாஸ் அகமது (16) நிலைக்கவில்லை.

கடைசி ஓவரில் பெங்களூரு வெற்றிக்கு 13 ரன் தேவைப்பட்டன. புவனேஷ்வர் வீசிய 20வது ஓவரில் ஒரு சிக்சர் உட்பட 8 ரன் மட்டுமே கிடைத்தன. பெங்களூரு அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 137 ரன் எடுத்து தோல்வியடைந்தது. டிவிலியர்ஸ் (19), கார்டன் (2) அவுட்டாகாமல் இருந்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
s t rajan - chennai,இந்தியா
07-அக்-202104:00:02 IST Report Abuse
s t rajan மேக்ஸ்வெல் சிறப்பாக விளையாடி வருவதால் தான் RCB இதுவரை வெற்றி கண்டது. ஆனால் அவர் ஒருவரே எத்தனை போட்டிகளில் வெற்றி பெற்றுத் தர முடியும் ? டிவிலியர்ஸ் தனது மேஜிக் டச்சை, மூப்பின் காரணமாக, இழந்து விட்டார் என்பது நேற்று தெரிந்து விட்டது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X