பொது செய்தி

தமிழ்நாடு

விடுமுறை தினத்தில் பணி 55 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

Added : அக் 06, 2021
Share
Advertisement
குன்னுார் : நீலகிரியில், காந்தி ஜெயந்தி தினத்தில் இரட்டிப்பு சம்பளம் அல்லது மாற்று விடுமுறை வழங்காமல் பணியாளர்களை பணிக்கு அமர்த்திய, 55 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) சதீஷ் குமார் தலைமையில், மாவட்டத்தில் குன்னுார், ஊட்டி, கோத்தகிரி பகுதிகளில் கடைகள், வணிக, உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து என 105 நிறுவனங்களில்,

குன்னுார் : நீலகிரியில், காந்தி ஜெயந்தி தினத்தில் இரட்டிப்பு சம்பளம் அல்லது மாற்று விடுமுறை வழங்காமல் பணியாளர்களை பணிக்கு அமர்த்திய, 55 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) சதீஷ் குமார் தலைமையில், மாவட்டத்தில் குன்னுார், ஊட்டி, கோத்தகிரி பகுதிகளில் கடைகள், வணிக, உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து என 105 நிறுவனங்களில், காந்தி ஜெயந்தி தினத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆணையர் சதீஷ்குமார் கூறுகையில்,''ஆய்வில்,15 கடைகள், 40 உணவு நிறுவனங்கள் என 55 நிறுவனங்களில் பணிபுரிந்த பணியாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம்; விடுமுறை வழங்காததால், சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X