கோர்ட் செய்தி

தமிழ்நாடு

முன்ஜாமின் கேட்டு ராஜேந்திர பாலாஜி மனு

Added : அக் 06, 2021
Share
Advertisement
மதுரை:சாத்துாரில், அ.தி.மு.க.,வினர் இடையே ஏற்பட்ட மோதல் விவகாரத்தில், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் முன்ஜாமின் மனுவை அவசர வழக்காக விசாரிக்க, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முறையிடப்பட்டது.முன்னாள் முதல்வர் பழனிசாமி, செப்., 14ல் திருநெல்வேலி செல்லும் போது, விருதுநகர் மாவட்டம், சாத்துார் வெங்கடாஜலபுரத்தில் அ.தி.மு.க.,வினர் வரவேற்பு அளித்தனர். அதில் ஏற்பட்ட மோதலில்,

மதுரை:சாத்துாரில், அ.தி.மு.க.,வினர் இடையே ஏற்பட்ட மோதல் விவகாரத்தில், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் முன்ஜாமின் மனுவை அவசர வழக்காக விசாரிக்க, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முறையிடப்பட்டது.

முன்னாள் முதல்வர் பழனிசாமி, செப்., 14ல் திருநெல்வேலி செல்லும் போது, விருதுநகர் மாவட்டம், சாத்துார் வெங்கடாஜலபுரத்தில் அ.தி.மு.க.,வினர் வரவேற்பு அளித்தனர். அதில் ஏற்பட்ட மோதலில், கிளை செயலர் வீரோவுரெட்டி தாக்கப்பட்டார். முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உட்பட சிலர் மீது, சாத்துார் டவுன் போலீசார் வழக்கு பதிந்தனர்.

முன்ஜாமின் கோரி, ஸ்ரீவில்லிபுத்துார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை ராஜேந்திர பாலாஜி வாபஸ் பெற்றார்.இந்நிலையில், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதி பி.புகழேந்தி முன், ராஜேந்திர பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் அஜ்மல்கான் ஆஜராகி, ''உள்நோக்கத்தில் தவறாக வழக்கு பதியப்பட்டுள்ளது. ''நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை நிறைவேற்றத் தயார். முன்ஜாமின் மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும்,'' என்றார்.

நீதிபதி, 'எம்.எல்.ஏ., - எம்.பி., முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் நீதிபதி அல்லது தலைமை நீதிபதியிடம் முறையிடலாம்' என்றார்.மனுதாரரின் வக்கீல், 'தலைமை நீதிபதி அமர்வு விடுமுறை என்பதால், இங்கு முறையிடுகிறோம். இந்நீதிமன்றம் விசாரிக்க வழிவகை உள்ளது' என்றார்.நீதிபதி, 'இங்கு விசாரிப்பதா, இல்லையா என ஆவணங்களை பரிசீலித்தபின் முடிவு செய்யப்படும்' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X