வழித்தடம் இன்றி கிராம மக்கள் தவிப்பு

Added : அக் 06, 2021
Share
Advertisement
அன்னுார் : வழக்கமாக பயன்படுத்தி வந்த, நடைபாதையை தனிநபர் மறித்ததால், வழித்தடம் இன்றி தவிப்பதாக, கிராம மக்கள், தாசில்தாரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.பொகலுார் ஊராட்சி, அட்டவணை செம்பட்டி, குளத்துப்பாளையம், ஒட்டு குஞ்சாம்பாளையம் ஆகிய ஊர்களில், 100 குடும்பங்கள் வசிக்கின்றன. இப்பகுதி மக்கள், அன்னுார் தாசில்தார் ரத்தினத்திடம் நேரில் அளித்த புகார் மனு:நாங்கள் பல தலைமுறையாக

அன்னுார் : வழக்கமாக பயன்படுத்தி வந்த, நடைபாதையை தனிநபர் மறித்ததால், வழித்தடம் இன்றி தவிப்பதாக, கிராம மக்கள், தாசில்தாரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.

பொகலுார் ஊராட்சி, அட்டவணை செம்பட்டி, குளத்துப்பாளையம், ஒட்டு குஞ்சாம்பாளையம் ஆகிய ஊர்களில், 100 குடும்பங்கள் வசிக்கின்றன. இப்பகுதி மக்கள், அன்னுார் தாசில்தார் ரத்தினத்திடம் நேரில் அளித்த புகார் மனு:நாங்கள் பல தலைமுறையாக அட்டவணை செம்பட்டிக்கு சென்று வந்த பாதையை, தனிநபர் ஒருவர், மறித்துக் கொண்டார்.இதனால், இந்த பகுதியில் உள்ள மாணவ, மாணவியர், குழந்தைகள், அட்டவணை செம்பட்டியில் உள்ள துவக்கப் பள்ளி மற்றும் அங்கன்வாடி மையத்துக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

நடப்பு ஊராட்சி தேர்தலிலும்ஓட்டளிக்கச் செல்ல முடியாத நிலை உள்ளது.இதுதொடர்பாக, ஏற்கெனவே இரண்டு முறை மனு தரப்பட்டுள்ளது. ஊராட்சித் தலைவரும் புகார் தெரிவித்துள்ளார். உடனடியாக இந்தப் பாதையை பொதுமக்களுக்கு மீண்டும் திறந்து விட, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது. 'சம்பவ இடத்தில், கள ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுப்பதாக' தாசில்தார் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X