பொது செய்தி

தமிழ்நாடு

நகை கடன் ஆய்வு பணியை துவக்கிய குழு 76 ஆயிரம் உறுப்பினர்களின் விண்ணப்பங்கள் ஆய்வு

Added : அக் 06, 2021
Share
Advertisement
ஊட்டி : நீலகிரியில், அரசு நியமித்த குழு, நகை கடன் குறித்த ஆய்வு பணியை துவக்கியது.மாநில அரசு அறிவித்துள்ள நகை கடன் தள்ளுபடியில், சில விதிமுறைகளை பின்பற்ற அரசு அறிவுறுத்தி உள்ளது. இதன்படி, தகுதியான நபர்களை கண்டறிவதற்காக, மாவட்டம் தோறும் குழு அமைத்து தீவிர ஆய்வு துவக்கப்பட்டுள்ளது.121 கூட்டுறவு வங்கியில் ஆய்வுநகை கடன் ஆய்வுக்கு அரசு நியமித்த குழுவினர், நேற்று முன்தினம்


ஊட்டி : நீலகிரியில், அரசு நியமித்த குழு, நகை கடன் குறித்த ஆய்வு பணியை துவக்கியது.

மாநில அரசு அறிவித்துள்ள நகை கடன் தள்ளுபடியில், சில விதிமுறைகளை பின்பற்ற அரசு அறிவுறுத்தி உள்ளது. இதன்படி, தகுதியான நபர்களை கண்டறிவதற்காக, மாவட்டம் தோறும் குழு அமைத்து தீவிர ஆய்வு துவக்கப்பட்டுள்ளது.121 கூட்டுறவு வங்கியில் ஆய்வுநகை கடன் ஆய்வுக்கு அரசு நியமித்த குழுவினர், நேற்று முன்தினம் ஊட்டி வந்தனர்.

அதில் ஒரு குழுவில், கூட்டுறவு சார்பதிவாளர் தலைமையில், மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர் மற்றும் நகை மதிப்பீட்டாளர் இடம் பெற்றுள்ளனர். நேற்று முதல் ஆய்வு பணியை இந்த குழுவினர் துவக்கியுள்ளனர். நீலகிரியில், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, என்.சி.எம்.எஸ்., நகர கூட்டுறவு வங்கி, பிளான்டேஷன் கூட்டுறவு வங்கி உள்ளிட்ட வங்கிகளின் கட்டுப்பாட்டில் உள்ள, 121 கூட்டுறவு வங்கிகளில் ஆய்வு நடத்த உள்ளனர்.51 விதமான தகவல் சேகரிப்பு 'ஒரு குடும்பத்தை சேர்ந்த உறுப்பினர்கள் பெற்ற அனைத்து நகை கடன்கள் பற்றிய பெயர்; கடன் பெற்ற கூட்டுறவு சங்கங்களின் விவரம்; கடன் பெற்ற நாள்; கடன் தொகை; கடன் கணக்கு எண்; வாடிக்கையாளர் தகவல் குறிப்பு எண்; குடும்ப அட்டை எண்; ஆதார் எண்,முகவரி, மொபைல் எண்,' உள்ளிட்ட, 51 விதமான தகவல்களை சேகரித்து, தொகுக்கப்பட்டு கணினி மூலம் விரிவான பகுப்பாய்வு செய்யப்படுகிறது.

கூட்டுறவு சங்கங்களில் இணைப்பதிவாளர் வாஞ்சிநாதன் கூறுகையில்,''நீலகிரியில், 121 கூட்டுறவு வங்கி மூலம், 300 கோடி ரூபாய்க்கு மேல் நகைக்கடன் வழங்கப்பட்டுள்ளது. 76 ஆயிரம் உறுப்பினர்களின் விண்ணப்பங்களை தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறது.குழுவின் ஆய்வு முடிந்த பின், அதற்கான அறிக்கை அரசுக்கு தெரிவிக்கப்படும். பின்பு இறுதி முடிவு எடுக்கப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X