பிரதான சாலை குழியால் தினமும் விபத்து

Added : அக் 06, 2021
Share
Advertisement
அன்னுார் : அன்னுாரில் பிரதான சாலையில் உள்ள குழிகளால் தினமும் விபத்து நடக்கிறது.அன்னுார் பிரதான சாலையும், ஒதிமலை சாலையும் சந்திக்கும் இடத்தில், ஒரு குழி உள்ளது.தேசிய நெடுஞ்சாலை என்பதால், அன்னுார் பிரதான சாலையில் தினமும், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் வந்து செல்கின்றன. குறிப்பாக இருசக்கர வாகனங்கள் இரவு நேரத்தில் வரும் போது குழி தெரியாததால், வேகமாக வந்து

அன்னுார் : அன்னுாரில் பிரதான சாலையில் உள்ள குழிகளால் தினமும் விபத்து நடக்கிறது.

அன்னுார் பிரதான சாலையும், ஒதிமலை சாலையும் சந்திக்கும் இடத்தில், ஒரு குழி உள்ளது.தேசிய நெடுஞ்சாலை என்பதால், அன்னுார் பிரதான சாலையில் தினமும், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் வந்து செல்கின்றன. குறிப்பாக இருசக்கர வாகனங்கள் இரவு நேரத்தில் வரும் போது குழி தெரியாததால், வேகமாக வந்து குழியில் விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர்.

தினமும் குறைந்தது இரண்டு பேராவது இருசக்கர வாகனத்தில் வந்து, விபத்தில் சிக்குகின்றனர்.இதேபோல, கோவை ரோட்டில், கே.ஜி. கார்னரில் ஒரு குழி உள்ளது. மழை பெய்யும் போது அந்தக் குழியில் நீர் நிரம்பி விடுவதால் அது தெரியாமல் இருசக்கர வாகனத்தில் வரும் பலர் விழுந்து விபத்துக்கு ஆளாகின்றனர். அவிநாசி சாலை-சத்தி சாலை சந்திப்பு என மூன்று இடங்களில் குழிகள் உள்ளன. 'நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடனடியாக இந்த மூன்று குழிகளிலும் ஜல்லி கற்கள் இட்டு நிரப்பி, தார் ஊற்றி, பராமரிப்பு பணி செய்ய வேண்டும். இல்லாவிட்டால் விபத்துகள் தொடர் கதையாகி விடும்' என, பொது மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X