எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

'நாக்' கமிட்டி ஆய்வு வாபஸ்: அண்ணா பல்கலை., க்கு சிக்கல்

Updated : அக் 06, 2021 | Added : அக் 06, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
தேசிய மதிப்பீட்டு மற்றும் அங்கீகார கவுன்சிலான, 'நாக்' சான்றிதழ் பெறுவதில் அண்ணா பல்கலைக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், நாக் கமிட்டியின் ஆய்வு நடவடிக்கை வாபஸ் பெறப்பட்டுள்ளது.நாடு முழுதும் செயல்படும் கலை, அறிவியல், இன்ஜினியரிங் உள்ளிட்ட அனைத்து வகை கல்லுாரிகளும், பல்கலைகளும், யு.ஜி.சி., என்ற மத்திய பல்கலை மானிய குழுவிடம் இருந்து நிதி பெற, இரண்டு வகை அங்கீகாரம்
'நாக்' கமிட்டி ஆய்வு வாபஸ்: அண்ணா பல்கலை., க்கு சிக்கல்

தேசிய மதிப்பீட்டு மற்றும் அங்கீகார கவுன்சிலான, 'நாக்' சான்றிதழ் பெறுவதில் அண்ணா பல்கலைக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், நாக் கமிட்டியின் ஆய்வு நடவடிக்கை வாபஸ் பெறப்பட்டுள்ளது.நாடு முழுதும் செயல்படும் கலை, அறிவியல், இன்ஜினியரிங் உள்ளிட்ட அனைத்து வகை கல்லுாரிகளும், பல்கலைகளும், யு.ஜி.சி., என்ற மத்திய பல்கலை மானிய குழுவிடம் இருந்து நிதி பெற, இரண்டு வகை அங்கீகாரம் பெற வேண்டும்.


கட்டமைப்புயு.ஜி.சி.,யின், 12 பி அந்தஸ்துக்கான சான்றிதழும், அதை தொடர்ந்து யு.ஜி.சி.,யால் அங்கீகரிக்கப்பட்ட, 'நாக்' சான்றிதழும் பெற வேண்டும். நாக் சான்றிதழ் பெற, பல்வேறு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.கல்லுாரி மற்றும் பல்கலை கட்டமைப்பு; மாணவர்கள், ஆசிரியர்களுக்கான வசதிகள்; மாணவர், பேராசிரியர் எண்ணிக்கை; ஆய்வகம், நுாலகம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள், நிதி நிலைமை, ஆராய்ச்சி முடிவுகள் உள்ளிட்ட விபரங்களை தாக்கல் செய்ய வேண்டும்.
இது உண்மையா என, 'நாக்' கமிட்டியினர் நேரில் ஆய்வு நடத்துவர்.இந்த வகையில், சென்னையில் உள்ள அண்ணா பல்கலை வளாகத்தில் உள்ள கிண்டி இன்ஜி., கல்லுாரி, ஏ.சி.டி., கல்லுாரி, கட்டட வடிவமைப்பியல் கல்லுாரி மற்றும் குரோம்பேட்டை எம்.ஐ.டி., ஆகியவற்றை உள்ளடக்கி, பல்கலை சார்பில், நாக் அந்தஸ்து பெறப்படும்.

அங்கீகாரம்ஏற்கனவே, 2014ல், 3.46 என்ற தர மதிப்பெண்ணுடன், 'ஏ கிரேடு' வகை நாக் சான்றிதழ் பெறப்பட்டுள்ளது. இது, ஐந்து ஆண்டுகள் மட்டுமே செல்லத்தக்கது என்பதால், 2019 செப்., மாதத்துடன் காலாவதியாகி விட்டது.புதிதாக நாக் அங்கீகாரம் பெற மத்திய தர அங்கீகார குழுவுக்கு, அண்ணா பல்கலை விண்ணப்பித்தது.

அதற்கான ஆவணங்களும் தாக்கல் செய்யப்பட்டன. நாக் கமிட்டி சார்பில் நேரடி ஆய்வு நடத்த தேதியும் குறிக்கப்பட்டது.குளறுபடிகள்இந்நிலையில், அண்ணா பல்கலை தாக்கல் செய்த ஆவணங்களை ஆய்வு செய்ததில், நிதி மற்றும் கட்டமைப்பு குறித்து ஆவணங்களில் குளறுபடிகள் இருந்தது கண்டறியப்பட்டு உள்ளது. இதையடுத்து, நாக் கமிட்டியின் ஆய்வு முடிவு, திடீரென வாபஸ் பெறப்பட்டுள்ளது. மேலும், நாக் அங்கீகாரம் பெற அமைக்கப்பட்ட வல்லுனர் குழுவும் கலைக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக, ஓராண்டுக்கு அண்ணா பல்கலைக்கு நாக் அங்கீகாரம் இல்லாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால், பல்கலைக்கு கிடைக்க வேண்டிய நிதி உதவி, புதிய திட்டங்கள், புதிய ஆராய்ச்சிகள் உள்ளிட்டவற்றுக்கு அனுமதி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
09-அக்-202100:27:54 IST Report Abuse
மலரின் மகள் இந்த பல்கலையின் தரம் என்றோ குறைந்து விட்டது. ஆனால் அதை ஏற்கும் மனப்பக்குவம் இல்லை. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்று கொண்டால் ஒன்றை சொல்கிறேன். நந்திதா பெண்கள் ஹாஸ்டல் சென்று வசதிகளை பாருங்கள். விதிமுறைகளில் எதுவும் இருக்காது. ஒரு சிறிய அறையில் ஐந்து முதல் எட்டு மாணவிகளுக்கு தங்குவதற்கு இடம். படிப்பதற்கு வசதிகள் இல்லை. டாய்லெட் வசதிகள் குறைவு. மதுரை பேருந்து நிலையத்தில் காலைக்கடனுக்கு காத்திருப்பது போல காத்திருக்கவேண்டும். அடிப்படை வசதிகளின் சிறிய வசதிகளை கூட செய்து கொடுப்பதற்கு மனமில்லை. அதற்கு இந்த சார்ஜ் ஆகா இருக்கின்ற இயந்திரவியல் பேராசிரியர் பெற்றோர்களை சந்திப்பதற்கு விரும்புவது கூட இல்லை. சென்றால் அமர்வதற்கு இடம் கூட தராமல் முகத்தை வேறுபக்கம் திருப்பி கொண்டு மனு எழுதி கொடுத்து விட்டு செல்லுங்கள் என்று சொல்வார். எத்துணை முறை உள்ளுறை மாணவ மாணவிகளுடன் குறை தீர்க்கும் கூட்டம் நடத்தி இருக்கிறார்கள் அவர்கள்? ஒன்றும் இருக்காது. ஹாஸ்டல் உணவு தொண்ணூறுகளுக்கு முன்பு இருந்ததில் நூறில் ஒருபங்கு கூட இல்லை. உணவும் உறையுள்ளும் தகுதி அற்று உள்ளது என்பதை அனைவரும் அங்கே உணரவேண்டும். கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு எப்படித்தான் ஏ தர சான்றிதழ்கள் தந்தார்களோ என்று ஆச்சரியமாக புருவம் உயர்த்தும் வகையில் இருந்தது. பழக்கிய பெருமையிலேயே தொடரவேண்டாமே உணருங்கள் ஆசிரிய பெருமக்களே. பேராசிரியர்களை இது போன்று அட்மினிஸ்டரேஷன் நிலைகளுக்கு கொண்டுவராமல் அதை தனியாக பிரித்து விடவேண்டும். தேவைப்பட்டால் இதற்காக ஒரு தனி அமைப்பை ஏற்படுத்தி கொள்ளலாம். செய்யமாட்டார்கள் அடுத்த சில வருடங்களுக்கு என்று தான் உணர முடிகிறது.
Rate this:
Cancel
M S RAGHUNATHAN - chennai,இந்தியா
07-அக்-202112:10:03 IST Report Abuse
M S RAGHUNATHAN நாக் கமிட்டி எதிராக அண்ணா பல்கலை கழகம் முன் திருவாளர் உதயநிதி உண்ணும் விரதம் போராட்டம். அலைகடல் என திரண்டு வாரீர். துறை அமைச்சர் வாய் திறக்கவில்லை. மாணவர்கள் வாழ்கையில் திமுக விளையாடுகிறது.
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
07-அக்-202109:58:40 IST Report Abuse
duruvasar நாக் கமிட்டி ஆய்விலிருந்து அண்ணா பல்கலைகழகத்தை மீட்க முதலில் சடட்டசபையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றுங்கள். ஏ.கே ராஜன் கமிட்டி நியமித்து அவரின் பரிந்துரையின் அடிப்படையில் இந்த சமூக நீதிக்கெதிரான சட்டபோராட்டத்தை தொடர்வதை தவிர தமிழர்களுக்கு வேறுவழியில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X