பொது செய்தி

தமிழ்நாடு

பெரியாறு அணையில் மழை: உயரும் நீர்மட்டம்

Added : அக் 06, 2021
Share
Advertisement
தேக்கடி:நீர்ப்பிடிப்பில் பெய்த மழையால் பெரியாறு அணை நீர்மட்டம் 128.45 அடியாக உயர்ந்தது.பெரியாறு அணை நீர்ப்பிடிப்பில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி பெரியாறில் 12.4 மி.மீ., தேக்கடியில் 39.8 மி.மீ., மழை பதிவானது. அணை நீர்மட்டம் 128.10 அடியில் இருந்து 128.45 அடியாக உயர்ந்தது(மொத்த உயரம் 152 அடி). நீர் இருப்பு 4363 மில்லியன்

தேக்கடி:நீர்ப்பிடிப்பில் பெய்த மழையால் பெரியாறு அணை நீர்மட்டம் 128.45 அடியாக உயர்ந்தது.பெரியாறு அணை நீர்ப்பிடிப்பில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி பெரியாறில் 12.4 மி.மீ., தேக்கடியில் 39.8 மி.மீ., மழை பதிவானது. அணை நீர்மட்டம் 128.10 அடியில் இருந்து 128.45 அடியாக உயர்ந்தது(மொத்த உயரம் 152 அடி). நீர் இருப்பு 4363 மில்லியன் கனஅடியாகும்.நீர்வரத்து வினாடிக்கு 2184 கனஅடியாகவும், தமிழக பகுதிக்கு குடிநீர், சாகுபடிக்கான நீர்திறப்பு 1300 கனஅடியாகவும் இருந்தது.

தேனிமாவட்டம் லோயர்கேம்ப் பெரியாறு நீர்மின் நிலையத்தில் 3 ஜெனரேட்டர்களில் 117 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. அணை நீர்ப்பிடிப்பில் நேற்று பகலில் வெயில் அடித்தாலும் மாலையில் மேகமூட்டம் இருந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X