தொழிற்பேட்டை அமைக்க எதிர்ப்பு பா.ஜ., எம்.எல்.ஏ., வானதி உறுதி| Dinamalar

தொழிற்பேட்டை அமைக்க எதிர்ப்பு பா.ஜ., எம்.எல்.ஏ., வானதி உறுதி

Added : அக் 06, 2021
Share
அன்னுார் : "அன்னுாரில் விவசாய நிலத்தில் தொழிற்பேட்டை அமைப்பதை தவிர்க்கும்படி, தொழில் துறை அமைச்சரிடம் வலியுறுத்துவேன்" என, எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன், விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தார்.அன்னுார் தாலுகாவில், குப்பனுார், அக்கரை செங்கப்பள்ளி, பொகலுார், வடக்கலுார் ஊராட்சிகளிலும், மேட்டுப்பாளையம் தாலுகாவில், பள்ளேபாளையம், இலுப்பநத்தம் ஊராட்சிகளிலும், 3 ஆயிரத்து 800
 தொழிற்பேட்டை அமைக்க எதிர்ப்பு  பா.ஜ., எம்.எல்.ஏ., வானதி உறுதி

அன்னுார் : "அன்னுாரில் விவசாய நிலத்தில் தொழிற்பேட்டை அமைப்பதை தவிர்க்கும்படி, தொழில் துறை அமைச்சரிடம் வலியுறுத்துவேன்" என, எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன், விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தார்.

அன்னுார் தாலுகாவில், குப்பனுார், அக்கரை செங்கப்பள்ளி, பொகலுார், வடக்கலுார் ஊராட்சிகளிலும், மேட்டுப்பாளையம் தாலுகாவில், பள்ளேபாளையம், இலுப்பநத்தம் ஊராட்சிகளிலும், 3 ஆயிரத்து 800 ஏக்கர் பரப்பளவில் தொழிற்பேட்டை அமைக்க 'டிட்கோ' ஆய்வு செய்து வருகிறது. இதற்கு அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.நேற்று அக்கரை செங்கப்பள்ளி, குப்பனுார் விவசாயிகள் மற்றும் பா.ஜ., ஒன்றிய மற்றும் கோவை வடக்கு மாவட்ட நிர்வாகிகள், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., வானதி சீனிவாசனை சந்தித்து மனு அளித்தனர்.'

இதனால் ஆறு ஊராட்சிகளில், 50 ஆயிரம் பேர் பாதிக்கப்படுவர். நிலத்தடி நீர் மாசுபடும். விவசாயம் செய்ய முடியாது. கால்நடை வளர்ப்பு அழிந்து போகும். எனவே, இங்கு, தொழிற்பேட்டை அமைக்கும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்' என விவசாயிகளும், பா.ஜ., நிர்வாகிகளும் தெரிவித்தனர்.வானதி சீனிவாசன், விவசாயிகளிடம் கூறுகையில், "இதுகுறித்து உடனடியாக கோவை கலெக்டருக்கு கடிதம் எழுதுகிறேன். விவசாய நிலத்தை கையகப்படுத்தக் கூடாது என, தொழில்துறை அமைச்சர் மற்றும் தொழில்துறை முதன்மை செயலரை சென்னையில் நேரில் சந்தித்து வலியுறுத்துவேன். விவசாய நிலங்கள் பறிபோகாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுப்பேன்" என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X