சிவகங்கை மாவட்டத்தில் பரவலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கண்மாய்களுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. தற்போது சிற்றாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மணிமுத்தாறு
அழகர்கோவில் வடபகுதியில் உள்ள வனப்பகுதியில் பெய்யும் மழை நீரானது சிங்கம்புணரி ஒன்றியம் மல்லாக்கோட்டை வழியாக எழுவினிக்கண்மாய் தடுப்பணை நிறைந்து அதிலிருந்து செல்லும் நீர் ஏரியூர் கண்மாய்க்கு செல்கிறது.ஏரியூர் பகுதியில்ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட 10 அடி உயரமுள்ள இரு ஷட்டர்கள் வழியாக வெளியேறும் நீர் மணிமுத்தாறாக உருவாகிறது.
திருக்கோஷ்டியூர் பகுதியில் உள்ள பாலம் வழியாக பாம்பாற்றில் கலக்கிறது.இங்கிருந்து செல்லும் நீர் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே இதன்கூர் பகுதி வழியாக கடலில் கலக்கிறது.தற்போது ஏரியூர் கண்மாய் நிறைந்து, மழை நீர் வெள்ளப்பெருக்காக மணிமுத்தாறு பகுதியில் ஓடுகிறது.மக்கள் மகிழ்ச்சிஏரியூர் அருகே கழுங்குப்பட்டியில் உள்ள தடுப்பணையில் இருந்து வெளியேறும் நீர் அருவி போல் விழுகிறது. அப்பகுதியில் உள்ள கிராம மக்கள் மகிழ்ச்சியில் நீராடி வருகின்றனர்.
15 ஆண்டுகளுக்குப்பின் கடந்த ஆண்டு மணிமுத்தாறு பகுதியில் நீர் வரத்து இருந்தது. தற்போது இந்தாண்டும் நீர் வரத்து இருப்பதால் விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மணிமுத்தாறு வழியில் உள்ள 260 கண்மாய்களுக்கும் நீராதாரமாக உள்ளது.உப்பாற்றில் வெள்ளம்மதுரை மாவட்டம் திருவாதவூர் பெரிய கண்மாயில் தொடங்கி சிவகங்கை மாவட்டத்திற்குள் புகுந்து வைகையாற்றில் கலக்கிறது.
உப்பாற்றிலும் வெள்ள பெருக்கு ஏற்பட்டு நீர் வரத்து உள்ளது. ஆறுகளில் மணல் கொள்ளையால் ஏற்பட்ட பள்ளங்கள், சீமைக்கருவேல முட்புதர்கள், ஆக்கிரமிப்பு, தடுப்பணை ஆகியவற்றை கடந்து வெள்ளம் பெருக்கெடுத்து செல்கிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE