சம்பவம் செய்தி

தமிழ்நாடு

94.65 ஏக்கர் அரசு நிலமாக பதிவு மற்றொரு சர்வேயர் 'சஸ்பெண்ட்'

Added : அக் 06, 2021
Share
Advertisement
தேனி:பெரியகுளம் வடவீரநாயக்கன்பட்டியில் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்ட 94.65 ஏக்கர் மீண்டும் அரசு நிலமாக பதிவு செய்யப்பட்டது. நில மோசடியில் சர்வேயர் பிச்சைமணி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.பெரியகுளம் தாலுகா வடவீரநாயக்கன்பட்டி சர்வே எண் 814ல் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. இதில் ரூ.94 லட்சம் மதிப்பிலான 94.65 ஏக்கர் நிலம் 27 பேருக்கு பட்டா மாறுதல் செய்யப்பட்டது. இது பெரியகுளம்

தேனி:பெரியகுளம் வடவீரநாயக்கன்பட்டியில் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்ட 94.65 ஏக்கர் மீண்டும் அரசு நிலமாக பதிவு செய்யப்பட்டது. நில மோசடியில் சர்வேயர் பிச்சைமணி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

பெரியகுளம் தாலுகா வடவீரநாயக்கன்பட்டி சர்வே எண் 814ல் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. இதில் ரூ.94 லட்சம் மதிப்பிலான 94.65 ஏக்கர் நிலம் 27 பேருக்கு பட்டா மாறுதல் செய்யப்பட்டது. இது பெரியகுளம் சப்-கலெக்டர் ரிஷப் விசாரணையில் தெரியவந்தது.

அரசுக்கு இழப்பீடு ஏற்படுத்தி புறம்போக்கு நில அளவுகளை கம்ப்யூட்டரில் மாற்றும் மோசடிக்கு உடந்தையாக இருந்த தாசில்தார்கள் கிருஷ்ணகுமார், ரத்தினமாலா, தேர்தல் துணை தாசில்தார்கள் மோகன்ராம், சஞ்சீவ்காந்தி ஆகியோரை அக்., 4ல் 'சஸ்பெண்ட்' செய்து கலெக்டர் முரளீதரன் உத்தரவிட்டார்.மாவட்ட பதிவாளர் திருஞானத்துடன் ஆலோசனை செய்தார்.

மோசடி செய்யப்பட்ட நில ஆவண மாற்றத்தை பதிவுத்துறை விதிகள்படி ரத்து செய்தவர் 94.65 ஏக்கரை மீண்டும் அரசு நிலமாக பதிவு செய்தார்.இந்நிலையில் 'சஸ்பெண்ட்' அதிகாரிகள், பெரியகுளம் தாலுகா தாமரைக்குளம் பேரூராட்சியில் 56 ஏக்கர் நிலத்தை 42 பேருக்கு பட்டா போட்டு அரசுக்கு இழப்பீடு ஏற்படுத்தியது தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக சர்வேயர் பிச்சைமணி'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். முன்னதாக பெரியகுளம் தாமரைக்குளத்தில் அரசு புறம்போக்கு நிலத்தை மனைவி பெயருக்கு பட்டா வழங்கிய சர்வேயர் சக்திவேலும் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

நில மோசடி குறித்து தேனி கலெக்டர் முரளீதரன் கூறுகையில், ''மோசடி நடந்த நிலத்தில் கனிம வள கொள்ளைகள் குறித்து கனிமவளம், நிலஅளவைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்கின்றனர். சம்பந்தப்பட்டவர்கள் குறித்து எஸ்.பி.,யிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X