தமிழ்நாடு

திருப்புவனத்தில் படிகளில் பயணம்; ஊழியர்களை மிரட்டும் மாணவர்கள்

Added : அக் 07, 2021
Share
Advertisement
திருப்புவனம் : திருப்புவனம் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து பள்ளிக்கு வரும் மாணவர்கள் பஸ்சின் படிகளில் தொடர்ந்து பயணம் செய்கின்றனர். தட்டி கேட்கும் ஊழியர்களை கூட்டமாக சேர்ந்து மிரட்டுகின்றனர். திருப்புவனத்தைச் சுற்றிலும் ஏனாதி, கண்ணாரிருப்பு, பூவந்தி, அல்லிநகரம், மேலராங்கியம், முதுவன்திடல் உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களில் இருந்து தினமும்

திருப்புவனம் : திருப்புவனம் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து பள்ளிக்கு வரும் மாணவர்கள் பஸ்சின் படிகளில் தொடர்ந்து பயணம் செய்கின்றனர். தட்டி கேட்கும் ஊழியர்களை கூட்டமாக சேர்ந்து மிரட்டுகின்றனர்.

திருப்புவனத்தைச் சுற்றிலும் ஏனாதி, கண்ணாரிருப்பு, பூவந்தி, அல்லிநகரம், மேலராங்கியம், முதுவன்திடல் உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களில் இருந்து தினமும் மாணவர்கள் திருப்புவனம் அரசு பள்ளிக்கு வந்து செல்கின்றனர். தற்போது 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை மட்டுமே பள்ளிகள் செயல்படுகின்றன. போதிய பேருந்து வசதி இருந்தும் மாணவர்கள் வேண்டுமென்றே குறிப்பிட்ட சில பேருந்துகளில் மட்டும் படிகளில் தொங்கியவாறே செல்வதுடன் தட்டி கேட்கும் டிரைவர், கண்டக்டர்களை கூட்டமாக சேர்ந்து கொண்டு மிரட்டுகின்றனர்.

போலீசாரும் பள்ளி மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயங்குகின்றனர். பெற்றோர்களும் கண்டு கொள்ளாததால் நாளுக்கு நாள் மாணவர்களின் இந்த பயணம் அதிகரித்து வருகிறது. இவர்கள் பஸ்சில் செல்லும் போது சாலைகளில் நடந்து செல்பவர்களை தட்டி விடுவது, பெண்களை கேலி செய்வது போன்ற செயல்களிலும் ஈடுபடுகின்றனர்.படிகளில் பயணம் செய்பவர்களின் பஸ் பாஸ் ரத்து செய்யப்படும் என அறிவித்தாலும் இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் மாணவர்கள் இந்த பயணம் தொடர்கிறது.மாவட்ட நிர்வாகம் படிகளில் பயணம் செய்யும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X