பொது செய்தி

தமிழ்நாடு

மானாமதுரையில் கொட்டும் மழையில் எல்லை தெய்வத்திற்கு அசைவ படையல்

Added : அக் 07, 2021
Share
Advertisement
மானாமதுரை : சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் மழை, விவசாயம் செழிக்க வேண்டி எல்லை தெய்வத்திற்கு மண் சட்டிகளில் விளக்கு ஏந்தி அசைவ படையல்களை ஊர்வலமாக கொண்டு சென்றனர்.மானாமதுரை அண்ணாதுரை சிலை அருகே மானாமதுரையின் எல்லை தெய்வமாக எல்லைப்பிடாரி அம்மன் கோயில் உள்ளது. 50 ஆண்டுகளுக்கும் மேலாக கிருஷ்ணராஜபுரம் கிராம மக்கள் புரட்டாசி செவ்வாய் சாற்றுதல் விழாவை கொண்டாடி

மானாமதுரை : சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் மழை, விவசாயம் செழிக்க வேண்டி எல்லை தெய்வத்திற்கு மண் சட்டிகளில் விளக்கு ஏந்தி அசைவ படையல்களை ஊர்வலமாக கொண்டு சென்றனர்.

மானாமதுரை அண்ணாதுரை சிலை அருகே மானாமதுரையின் எல்லை தெய்வமாக எல்லைப்பிடாரி அம்மன் கோயில் உள்ளது. 50 ஆண்டுகளுக்கும் மேலாக கிருஷ்ணராஜபுரம் கிராம மக்கள் புரட்டாசி செவ்வாய் சாற்றுதல் விழாவை கொண்டாடி வருகின்றனர்.கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக திருவிழா நடைபெறாத நிலையில் இந்தாண்டு விழாவை முன்னிட்டு கிருஷ்ணராஜபுரம் கிராமத்தார்கள் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு காப்புக்கட்டி விரதம் இருந்து வந்தனர்.

நேற்று முன்தினம் இரவு விழாவை ஒட்டி புது மண் சட்டிகளில் பணியாரம், கொழுக்கட்டையுடன் கறிச்சோறு, நாட்டுக்கோழி, கருவாடு, ஆட்டுகறி, முட்டை, மீன் உள்ளிட்ட அசைவ உணவுகளை தங்களது வீடுகளில் தயாரித்து மண்சட்டியில் கோயிலுக்கு கொண்டு செல்ல புறப்பட்ட போது கடும் மழை பெய்ய துவங்கியது. எனினும் மக்கள் பாரம்பரிய முறைப்படி கொட்டும் மழையில் தீப்பந்த விளக்கு ஏற்றி நகரின் முக்கிய வீதிகளின் வழியே ஊர்வலமாக கோயிலுக்கு வந்து பிடாரி அம்மனுக்கு படைத்து வழிபட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X