பொது செய்தி

தமிழ்நாடு

சிவகங்கை மருத்துவமனையில் புதிய ஆக்சிஜன் உற்பத்தி மையம்

Added : அக் 07, 2021
Share
Advertisement
சிவகங்கை : சிவகங்கை மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் நிமிடத்திற்கு ஆயிரம் லிட்டர் ஆக்சிஜன் தயாரிக்கும் இயந்திரம் ஒரு கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ளது. (அக்.,7) இன்று முதல் செயல்பட தொடங்குகிறது.கொரோனா தொற்று பரவல் காலங்களில் அரசு மருத்துவமனைகளில் மூச்சு திணறல் ஏற்பட்ட நோயாளிகளுக்கு முறையாக ஆக்சிஜன் கிடைக்காமல் தட்டுப்பாடு ஏற்பட்டது.இதன் காரணமாக பல

சிவகங்கை : சிவகங்கை மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் நிமிடத்திற்கு ஆயிரம் லிட்டர் ஆக்சிஜன் தயாரிக்கும் இயந்திரம் ஒரு கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ளது. (அக்.,7) இன்று முதல் செயல்பட தொடங்குகிறது.

கொரோனா தொற்று பரவல் காலங்களில் அரசு மருத்துவமனைகளில் மூச்சு திணறல் ஏற்பட்ட நோயாளிகளுக்கு முறையாக ஆக்சிஜன் கிடைக்காமல் தட்டுப்பாடு ஏற்பட்டது.இதன் காரணமாக பல உயிர்கள் பலியாகும் நிலை உருவானது. வெளி மாநிலங்களில் இருந்து ஆக்சிஜன் பெறப்பட்டு பற்றாக்குறையை சமாளிக்க பல்வேறுஇடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. மத்திய அரசு அவசர காலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க பிரதமரின் நிதியிலிருந்துஒரு கோடி ரூபாய் செலவில் ஆக்சிஜன் தயாரிக்கும் கருவி நிறுவப்பட்டுள்ளது.

இதற்கு தனியாக ஆக்சிஜன் சிலிண்டர் தேவையில்லை. வெளியே உள்ள காற்றினை எடுத்துக்கொள்ளும் இயந்திரம் 93 முதல் 96 சதவீதம் வரை சுத்தமான ஆக்சிஜன் தயாரித்து நிமிடத்திற்கு ஆயிரம் லிட்டர் வரை நோயாளிகளுக்கு வழங்கும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் தெரிவிக்கையில் இந்தியா முழுவதும் ஆயிரம் மருத்துவமனைகளில் இது போன்ற ஆக்சிஜன் தயாரிக்கும் கருவி நிறுவப்பட்டுள்ளது. இதனை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X