பொது செய்தி

தமிழ்நாடு

மரத்தை வெட்டாததால் குடிமராமத்து பணி ரத்தான வைரவன்பட்டி கண்மாய்

Added : அக் 07, 2021
Share
Advertisement
திருப்புத்துார் : திருப்புத்துார் ஒன்றியம் கே.வைரவன்பட்டி ஊராட்சியில் வேலங்குடி கண்மாய் மிகப்பெரியதாகும். இதில் நீர் பெருகினால் தான் திருப்புத்துார் பெரிய கண்மாய்க்கு நீர் வரத்து ஏற்படும். இக்கண்மாய்க்கு பாலாறு மூலமும், சுற்று வட்டாரத்தில் பெய்யும் மழை மூலமும் நீர் வரத்து ஏற்படும். இந்தாண்டு தொடர் மழையாலும், திண்டுக்கல் மாவட்டத்தில் மழை அதிகம் என்பதாலும்

திருப்புத்துார் : திருப்புத்துார் ஒன்றியம் கே.வைரவன்பட்டி ஊராட்சியில் வேலங்குடி கண்மாய் மிகப்பெரியதாகும். இதில் நீர் பெருகினால் தான் திருப்புத்துார் பெரிய கண்மாய்க்கு நீர் வரத்து ஏற்படும். இக்கண்மாய்க்கு பாலாறு மூலமும், சுற்று வட்டாரத்தில் பெய்யும் மழை மூலமும் நீர் வரத்து ஏற்படும். இந்தாண்டு தொடர் மழையாலும், திண்டுக்கல் மாவட்டத்தில் மழை அதிகம் என்பதாலும் பாலாற்றுக்கு நீர் வரத்து ஏற்படும் வாய்ப்புள்ளது.

தற்போது இக்கண்மாய் 15 ஆண்டுகளுக்கும் மேலாக பராமரிப்பின்றி துார்வாராமல் உள்ளதால் கண்மாய் கொள்ளளவு குறைந்து விட்டது. இக்கண்மாயில் பெருகியுள்ள சீமைக்கருவை மரங்களே காரணமாகும். இக்கண்மாயில் குடிமராமத்து பணி செய்ய கடந்த ஆண்டு அனுமதி கிடைத்தும் நடைமுறைப்படுத்த முடியாமல் ரத்தாகி விட்டது. மரங்கள் வெட்டப்படாததால் துார்வாரும் பணியும் நின்றது. மரங்களை வெட்ட ஏல நடைமுறைகள் முடிந்தும், சீமைக்கருவை மரங்கள் வெட்ட கோர்ட் உத்தரவு உள்ளதாக கூறி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக மரங்கள் வெட்ட அனுமதியாகவில்லை. இதனால் கண்மாய் துார்வாரும் பணியும் தள்ளி போகிறது. பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கண்மாயில் மரங்களை வெட்ட துறையினரும் மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க கிராமத்தினர் கோரியுள்ளனர்.

ஊராட்சி தலைவர் சிவமணி கூறுகையில், இக்கண்மாயில் மரங்கள் வெட்டப்படாததால் கிராமத்தில் விவசாயத்திற்கு முழுமையான பாசன வசதி இல்லாமல் நெல் சாகுபடியில் நல்ல விளைச்சல் கிடைக்கவில்லை. விவசாய பரப்பும் குறைந்து வருகிறது. அதிகாரிகள் மரங்களை அகற்ற நடவடிக்கை எடுத்து துார் வார அனுமதிக்க வேண்டும்.இதன் மூலம் கண்மாய் மட்டுமின்றி கிராமத்திலுள்ள ஊரணிகளும், தொடர்ச்சியாக ஐந்து கண்மாய், ஏந்தல்களில் நீர் பெருகும்.நிலத்தடி நீர் மட்டம் அதிகரிக்கும்' என்றார்.

விவசாயி பெரி.சாத்தையா கூறுகையில், சீமைக்கருவேல மரம் வளரும் போது சுற்றிலும் வேர்கள் பெரிய பள்ளத்தை ஏற்படுத்தி நீரை உறிஞ்சி விடுகிறது. இதனால் இந்த மரங்கள் இருக்கும் வரை கண்மாயில் நீர் தேங்காது.கண்மாயில் மரங்களை அகற்ற வேண்டும். கே.வைரவன்பட்டியில் கண்மாய்,ஏந்தல்கள் ஆறு உள்ளன. 250 ஏக்கருக்கும் மேல் வயல்கள் இருந்தும் சாகுபடியாவது மிகவும் குறைவு தான்.' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X