பொது செய்தி

தமிழ்நாடு

தென்னை நாற்று பற்றாக்குறை

Added : அக் 07, 2021
Share
Advertisement
சிங்கம்புணரி : சிங்கம்புணரியில் தென்னை நாற்றுகள் பற்றாக்குறையால் மாவட்ட விவசாயிகள் சிரமப்படுகின்றனர்.சதுர்வேதமங்கலம் அரசு தென்னை நாற்று பண்ணையில் ஆண்டுக்கு 30 ஆயிரம் கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு மாவட்டம் முழுவதும் அனுப்பி வைக்கப்படுகிறது. இந்தாண்டு அதிக எண்ணிக்கையில் நாற்றுகள் கேட்டு வருவதால் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.சீசன் துவங்கிய ஓரிரு நாட்களிலேயே

சிங்கம்புணரி : சிங்கம்புணரியில் தென்னை நாற்றுகள் பற்றாக்குறையால் மாவட்ட விவசாயிகள் சிரமப்படுகின்றனர்.

சதுர்வேதமங்கலம் அரசு தென்னை நாற்று பண்ணையில் ஆண்டுக்கு 30 ஆயிரம் கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு மாவட்டம் முழுவதும் அனுப்பி வைக்கப்படுகிறது. இந்தாண்டு அதிக எண்ணிக்கையில் நாற்றுகள் கேட்டு வருவதால் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.சீசன் துவங்கிய ஓரிரு நாட்களிலேயே அனைத்து நாற்றுகளும் விற்றுத் தீர்ந்தது. இதனால் தென்னங்கன்றுகள் நடவு செய்ய காத்திருந்த விவசாயிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

தனியார் உற்பத்தியாளர்களிடத்திலும் கன்றுகள் கிடைக்கவில்லை. முன்பு சிங்கம்புணரி வழியாக செல்லும் பாலாற்றில் ஆண்டுதோறும் தண்ணீர் ஓடிய நிலையில் ஏராளமான விவசாயிகள் தென்னை பயிரிட்டு பலனடைந்து வந்தனர். ஆற்றில் பல இடங்களில் தடுப்பணை என்ற பெயரில் தண்ணீர் திருப்பப்பட்டதால் ஆற்றோர கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து தென்னை விவசாயம் பாதித்தது.அரசு பண்ணையில் தென்னங்கன்றுகள் தேக்கம் அடைந்தது.

ஆனால் நெல், கடலை சாகுபடி செய்த விவசாயிகள் பலர், கூலியாட்கள் கிடைக்காததால் தற்போது தென்னை சாகுபடிக்கு மாறி வருகின்றனர். இதன் காரணமாகவே தென்னை நாற்றுகளுக்கு கிராக்கி ஏற்பட்டு பற்றாக்குறை நிலவுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X