சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விசாரணைக்கு சென்ற விவசாயி தற்கொலை

Added : அக் 07, 2021
Share
Advertisement
திருப்பூர்:திருப்பூரில் போலீஸ் ஸ்டேஷனுக்கு விசாரணைக்கு சென்றவர், விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.திருப்பூரைச் அடுத்த மங்கலத்தைச் சேர்ந்தவர் சண்முகம், 41; விவசாயி. இவரது பெரியப்பா மகன் குடும்பத்தினருடன் இடப்பிரச்னை இருந்து வந்தது. 4ம் தேதி, சண்முகத்தின் அண்ணி சாந்தாமணி, 42, தோட்டத்துக்கு நடந்து சென்றார். அவ்வழியாக காரில் சென்ற சண்முகம், அவர் மீது மோதினார்.

திருப்பூர்:திருப்பூரில் போலீஸ் ஸ்டேஷனுக்கு விசாரணைக்கு சென்றவர், விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.

திருப்பூரைச் அடுத்த மங்கலத்தைச் சேர்ந்தவர் சண்முகம், 41; விவசாயி. இவரது பெரியப்பா மகன் குடும்பத்தினருடன் இடப்பிரச்னை இருந்து வந்தது. 4ம் தேதி, சண்முகத்தின் அண்ணி சாந்தாமணி, 42, தோட்டத்துக்கு நடந்து சென்றார். அவ்வழியாக காரில் சென்ற சண்முகம், அவர் மீது மோதினார். இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.


சண்முகத்தை விசாரணைக்கு அழைத்து சென்றனர். அங்கு பாத்ரூம் சென்ற சண்முகம், திரும்பி வந்தபோது வாந்தி எடுத்தார். சந்தேகமடைந்த போலீசார், திருப்பூர் அரசு மருத்துவ மனைக்கு அழைத்து சென்ற னர். அங்கு சிகிச்சைக்கு ஒத்துழைக்காமல், மறைத்து வைத்திருந்த விஷத்தை வாயில் போட முயன்றார். மருத்துவ பணியாளர்கள், போலீசார் தடுத்தனர். சற்று நேரத்தில் மயக்கம்அடைந்தார். பரிசோதனையில் சண்முகம் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X