போலீஸ் செய்திகள்

Added : அக் 07, 2021
Share
Advertisement
மணல் திருடிய மூவர் கைதுசிவகாசி: எம்.புதுப்பட்டி எஸ்.ஐ., சதீஷ்குமார் தலைமையில் போலீசார் புதுக்கோட்டை கண்மாய் பகுதியில் ரோந்து சென்றனர். மணல் அள்ளும் இயந்திரம் மூலம் டிப்பர் லாரிகளில் சிலர் மணல் ஏற்றினர். போலீசாரை கண்டதும் பி.பாரைப்பட்டி தங்கேஸ்வரன் தப்பினார். மணல் அள்ளும் இயந்திரம் டிரைவர்களான அழகாபுரி கிருஷ்ணமூர்த்தி, கருப்பசாமி பாண்டியன், முதலை பட்டியை

மணல் திருடிய மூவர் கைது

சிவகாசி: எம்.புதுப்பட்டி எஸ்.ஐ., சதீஷ்குமார் தலைமையில் போலீசார் புதுக்கோட்டை கண்மாய் பகுதியில் ரோந்து சென்றனர். மணல் அள்ளும் இயந்திரம் மூலம் டிப்பர் லாரிகளில் சிலர் மணல் ஏற்றினர். போலீசாரை கண்டதும் பி.பாரைப்பட்டி தங்கேஸ்வரன் தப்பினார். மணல் அள்ளும் இயந்திரம் டிரைவர்களான அழகாபுரி கிருஷ்ணமூர்த்தி, கருப்பசாமி பாண்டியன், முதலை பட்டியை சேர்ந்த மாணிக்கராஜாவை கைது செய்தனர். டிப்பர் லாரி உரிமையாளர்கள் பி.பாரைப்பட்டி போதராஜா, அழகர்சாமி, கருப்பசாமி, டிரைவர் தங்கேஸ்வரனை தேடுகின்றனர்.

லாட்டரி விற்ற இருவர் கைது

ஸ்ரீவில்லிபுத்துார்: டவுன் போலீசார் கம்மாபட்டி பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது சந்தேகத்திற்குரிய வகையில் நின்றிருந்த, மதுரை அலங்காநல்லூரை சேர்ந்த தனசேகரன், 42, கம்மாபட்டி தெருவை சேர்ந்த சந்திரசேகர் 40. ஆகியோரிடம் விசாரித்தனர். துண்டு சீட்டு லாட்டரி விற்பனையில் ஈடுபட்டது தெரிய வர , இருவரையும் கைது செய்த போலீசார், ரூ.4 லட்சத்தையும் பறிமுதல் செய்தனர்.

ஊராட்சி அலுவலகத்தில் தீ

திருச்சுழி: திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்தது கல்லுாரணி ஊராட்சி. இதன் அலுவலகத்தில் நேற்று காலை 6:30 மணிக்கு தீ பற்றி எரிந்தது. கம்ப்யூட்டர், 2 பிரின்டர்கள், சேர்கள், கோப்புகள் எரிந்து சேதமாயின. அருப்புக்கோட்டை தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். எம்.ரெட்டியபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

விபத்தில் வாலிபர் பலி

காரியாபட்டி: ஆவியூரை சேர்ந்தவர் தனியார் ஊழியர் அருண்குமார் 23. நேற்று முன்தினம் இரவு பணி முடித்து டூவீலரில் (ஹெல்மெட் அணியவில்லை)நான்கு வழிச்சாலையில் வந்தார். அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலியானார். ஆவியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X