தமிழ்நாடு

இடிந்து விழும் நிலையில் பராமரிப்பற்ற கட்டடங்கள்; தேவை நடவடிக்கை

Added : அக் 07, 2021
Share
Advertisement
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் பராமரிப்பற்ற, கைவிடப்பட்ட தனியார் கட்டடங்கள், குடியிருப்புகளால் மழைக்காலத்தில் விபத்து ஏற்படாமல் தடுக்க ,பேரிடர் நிர்வாகத்துறையினர் கொண்ட கண்காணிப்பு குழு அமைத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.மாவட்டத்தில் அனைத்து உள்ளாட்சிகளிலும் கைவிடப்பட்ட தனியார் கட்டடங்கள், குடியிருப்புகள் உள்ளன. அதே அரசு சார்பில் சமுதாய கூடங்கள்,

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் பராமரிப்பற்ற, கைவிடப்பட்ட தனியார் கட்டடங்கள், குடியிருப்புகளால் மழைக்காலத்தில் விபத்து ஏற்படாமல் தடுக்க ,பேரிடர் நிர்வாகத்துறையினர் கொண்ட கண்காணிப்பு குழு அமைத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாவட்டத்தில் அனைத்து உள்ளாட்சிகளிலும் கைவிடப்பட்ட தனியார் கட்டடங்கள், குடியிருப்புகள் உள்ளன. அதே அரசு சார்பில் சமுதாய கூடங்கள், சுகாதார வளாக கட்டடங்களும் மோசமான நிலையில் உள்ளன. ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழைக்கு முன் ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டு 20 ஆண்டுகள் பழமையான கட்டடங்களை ஆய்வு செய்ய ,பொதுப்பணித்துறையின் கட்டடங்கள், தீயணைப்பு துறையினருக்கு அறிவுறுத்தப்படும்.

இந்தாண்டு இப்பணியை தீவிரமாக செய்ய வேண்டிய கட்டாயத்தில் மாவட்ட நிர்வாகம் உள்ளது.பராமரிப்பின்றி கைவிடப்பட்ட கட்டடங்களில் சுவர்கள் மழையால் ஈரப்பதம் ஏறி உள்ளன. பல இடங்களில் விழும் அபாய நிலையில் உள்ளன. இவை பெரும்பாலும் குடியிருப்பு பகுதிகளை யொட்டி இருப்பதால் மழைக்கால பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. தரமாக கட்டப்பட்ட கட்டடங்களே இடியால் சேதமடையும் போது பழைய கட்டடங்களின் நிலையை கேள்விக்குறியாக தான் உள்ளது.

பேரிடர் நிர்வாகத்துறையினர் இது குறித்து ஆய்வு செய்து உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து சம்மந்தப்பட்டவர்களுக்கு உரிய அறிவுறுத்தல் வழங்க வேண்டும். மாவட்ட நிர்வாகம் இதற்கென தனி குழுவை அமைத்து மாவட்டத்தில் அபாய நிலையில் உள்ள கட்டடங்களின் எண்ணிக்கையை கண்டறிய வேண்டும். இதன் மூலம் இடர்பாடுகள் ஏற்படுவதை தடுக்க முடியும்.


தீர்வு காண வேண்டும்

பல இடங்களில் மழைக்காலங்களில் வீடுகள் இடிந்து விழுவது வாடிக்கையாக உள்ளது. இம்மாதிரியான கட்டடங்கள் அருகே குழந்தைகள் விளையாடுவதை மனதை பதைபதைக்க செய்கிறது. பெரும்பாலும் குடியிருப்பு அருகில் இருப்பதால் பெரும் பிரச்னையாக உள்ளது. மாவட்ட நிர்வாகம் பழைய கட்டடங்களை கண்டறிந்து உரிய தீர்வு காண வேண்டும்.ஜி.செந்தில்குமார், சமுக ஆர்வலர், விருதுநகர். ...................

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X