50 ஆண்டுகளை கடந்தும் வசதி இல்லை; அல்லல்படும் அம்பேத்கர் நகர் மக்கள்

Added : அக் 07, 2021
Share
Advertisement
ராஜபாளையம் : ராஜபாளையம் ஒன்றியம் மேலப்பாட்டம் கரிசல்குளத்தில் உள்ள அம்பேத்கார் நகர் உருவாகி 50 ஆண்டுகள் கடந்தும் பொது சுகாதார வசதி, முறையான கழிவு நீர் வெளியேற்றம், ஊருக்குள் ரேஷன் கடை உள்ளிட்ட வசதிகள் இன்றி தவிக்கின்றனர்.ராஜபாளையம் தென்றல் நகர் செல்லும் ரோட்டில் உள்ளது அம்பேத்கர் நகர். 460 குடியிருப்புகளுடன் உள்ள இப்பகுதியில் அடிப்படை வசதிகளான ரோடு வசதியே தற்போது

ராஜபாளையம் : ராஜபாளையம் ஒன்றியம் மேலப்பாட்டம் கரிசல்குளத்தில் உள்ள அம்பேத்கார் நகர் உருவாகி 50 ஆண்டுகள் கடந்தும் பொது சுகாதார வசதி, முறையான கழிவு நீர் வெளியேற்றம், ஊருக்குள் ரேஷன் கடை உள்ளிட்ட வசதிகள் இன்றி தவிக்கின்றனர்.

ராஜபாளையம் தென்றல் நகர் செல்லும் ரோட்டில் உள்ளது அம்பேத்கர் நகர். 460 குடியிருப்புகளுடன் உள்ள இப்பகுதியில் அடிப்படை வசதிகளான ரோடு வசதியே தற்போது தான் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.குடியிருப்பின் உள்ளே அங்கன் வாடி அமைக்காததால் அடுத்த பகுதிக்கு 25க்கு மேற்பட்ட குழந்தைகள் சென்று வருகின்றனர். இதனால் இதே பகுதியில் உள்ள அரசுபள்ளியில் மாணவர் சேர்க்கை குறைகின்றன.ஊருக்குள் 60 ஆயிரம், 30 ஆயிரம் லிட்டர் மேல் நிலை குடிநீர் தொட்டி இருந்தும் இப்பகுதிவாசிகளுக்கு தேவைக்கு குடிக்க நீர் இல்லை.

ஆரம்ப சுகாதார மையம் நீண்டநாள் சேதமடைந்து செயல்பாட்டில் இல்லாமல் உள்ளதுஆரம்பத்தில் செவிலியர் தங்கி பிரசவம் நடந்து வந்த இடத்தில் தற்போது பராமரிப்பின்றி காட்சிப்பொருளாக உள்ளது. இதனால் ஜமீன் கொல்லங்கொண்டான் சுகாதார மையத்திற்கு செல்ல வேண்டியுள்ளது. பொது சமுதாய கட்டடமும் சேதத்துடன் உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X