குட்டையாக மாறும் குமாரலிங்கபுரம் கண்மாய்; கும்மாளம்போடும் குடிமகன்கள்

Added : அக் 07, 2021
Share
Advertisement
விருதுநகர் : புதர் மண்டி மண் மேவி இருப்பதால் முழுமையாக நீர் சேகரிக்க முடியாத அவல நிலையில் உள்ள வி.குமாரலிங்கபுரம் கண்மாய் குட்டையாக மாறி வருகிறது.இதோடு இப்பகுதி திறந்த நிலை பாராக மாற குடிமகன்கள் கும்மாளம் போடுவதும் தொடர்கிறது.இக்கண்மாய் மூலம் 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை இப்பகுதி விவசாயிகள் நெல் சாகுபடி செய்து வந்தனர். தேவைக்கு ஏற்ப தண்ணீர் இல்லாததால் தற்போது

விருதுநகர் : புதர் மண்டி மண் மேவி இருப்பதால் முழுமையாக நீர் சேகரிக்க முடியாத அவல நிலையில் உள்ள வி.குமாரலிங்கபுரம் கண்மாய் குட்டையாக மாறி வருகிறது.

இதோடு இப்பகுதி திறந்த நிலை பாராக மாற குடிமகன்கள் கும்மாளம் போடுவதும் தொடர்கிறது.இக்கண்மாய் மூலம் 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை இப்பகுதி விவசாயிகள் நெல் சாகுபடி செய்து வந்தனர். தேவைக்கு ஏற்ப தண்ணீர் இல்லாததால் தற்போது மக்கா சோளம், மாடுகளுக்கான தீவனம் தான் பெருமளவு பயிரிடப்படுகிறது.

2019 ல் குடிமராமத்து பணியில் கண்மாய் துார்வாரப்பட்டும் கண்மாயை ஆழப்படுத்தாமல் கடமைக்கு செடிகளை மட்டும் அப்புறப்படுத்தி உள்ளனர். உள் பகுதியில் உள்ள மண்ணை அள்ளாமல் விட்டதால் மண் திட்டுக்கள் அதிகமாக உள்ளன. இதனால் போதுமான மழை பெய்தால் கூட நீரை சேமிக்க முடியாமல் போகிறது.கானல் நீராகும் கண்மாய் நீர்ஸ்ரீனிவாசன், விவசாயி: கண்மாய் நிறைந்த சிறிது நாட்களிலே நீர் வேகமாக வற்ற துவங்கி விடுகிறது.

நீர் நிறைந்திருக்கிறது இந்த ஆண்டு விவசாயம் செழித்து விடும் என்று எண்ணுவதற்குள்,கண்மாய் நீர் கானல் நீராக மறைந்து விடுகிறது. மேவி இருக்கும் மண்ணை அகற்றி கண்மாயை ஆழப்படுத்தி நீர் ஆதாரத்தை பெருக்க வேண்டும்.நீர் இருந்தும் நோ யூஸ்வாலகுரு, விவசாயி: கண்மாயில் நீர் இருந்தாலும் கண்மாய் பாசன வசதி இல்லாததால் பயன்படுத்த முடிவதில்லை. கண்மாய் நிறைந்தால் கிணற்றில் தண்ணீர் மேலும் சில மாதங்கள் இருக்கும். அதை வைத்து தான் பயிர்களை காப்பாற்றி வருகிறோம். 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை இப்பகுதி விவசாயிகள் நெல் பயிரிட்டு வந்தனர். ஆனால் தற்போது வானம் பார்த்த பூமி ஆனதால் சோளம் தான் பயிரிடப்படுகிறது.

எங்கள் நீர் எங்களுக்கே கிடைப்பதில்லை
தனுஷ்கோடி, விவசாயி: விருதுநகரில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் போதெல்லாம் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கண்மாயில் இருந்து நீரை எடுக்கின்றனர். இந்த சிறிய நீர் ஆதாரத்தை நம்பி தான் இங்கு பல விவசாயிகள் இருக்கிறோம்.இருந்தும் கண்மாயை கண்டுக்காமல் விட்டுள்ளனர்.குடிமகன்களுக்கு தான் பயன்படுகிறதுஸ்ரீராமன், விவசாயி: கண்மாய் ஊருக்குள் ரோட்டோரத்தில் இருப்பதால் இதன் கரைகளில் குடிமகன்கள் குடிகொண்டுள்ளனர். கண்மாயில் நீர் இருக்கும் நேரங்களில் பொதுமக்கள் குளிப்பதற்கு கண்மாயை பயன்படுத்துகின்றனர்.

ஆழம் இல்லாத இந்த கண்மாய் நீரும் விரைவாக வற்றிவிடும். கண்மாயை ஆழப்படுத்தி நீரைசேமித்தால் விவசாயத்திற்கு பெரிதும் பயன்படும்.சரிசெய்தும் பயன் இல்லைவிஜயகுமார், விவசாயி: பல ஆண்டுகளாக பழுதடைந்து இருந்த இக்கண்மாய் ஷட்டர் பல கோரிக்கைகளுக்கு பின் 2019ல் தான் சரி செய்யப்பட்டது. ஆனால் அதுவும் சாதாரணமான கம்பி பயன்படுத்தி அமைக்கப்பட்டுள்ளதால் பலவீனமாக காணப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X