பொது செய்தி

தமிழ்நாடு

கோயில்களில் நவராத்திரி விழா துவக்கம்

Added : அக் 07, 2021
Share
Advertisement
விருதுநகர் : விருதுநகர் மாவட்ட கோயில்களில் நேற்று நவராத்திரி விழா துவங்கியது.புரட்டாசி அமாவாசையின் பூர்வ பட்ச பிரதமை திதியில் நவராத்திரி விழா துவங்குகிறது. மகிஷாசூரனை வதம் செய்ய ஆதிபராசக்தி அம்மன் 9 நாட்கள் விரதமிருப்பாள். 9வது நாளில் சரஸ்வதி பூஜையும், 10வது நாளில் விஜயதசமியும் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் நேற்று நவராத்திரி விழா துவங்கியதால் கோயில்கள் களை கட்ட

விருதுநகர் : விருதுநகர் மாவட்ட கோயில்களில் நேற்று நவராத்திரி விழா துவங்கியது.புரட்டாசி அமாவாசையின் பூர்வ பட்ச பிரதமை திதியில் நவராத்திரி விழா துவங்குகிறது.

மகிஷாசூரனை வதம் செய்ய ஆதிபராசக்தி அம்மன் 9 நாட்கள் விரதமிருப்பாள். 9வது நாளில் சரஸ்வதி பூஜையும், 10வது நாளில் விஜயதசமியும் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் நேற்று நவராத்திரி விழா துவங்கியதால் கோயில்கள் களை கட்ட துவங்கின. விருதுநகரில் மீனாட்சி சொக்கநாதர் கோயில், ராமர் கோயில், பராசக்தி மாரியம்மன் கோயில், வெயிலுகந்தம்மன் கோயில் காளியம்மன் கோயில்களில் சிறப்பு பூஜை நடந்தன.

ஸ்ரீவில்லிபுத்துார்: ஆண்டாள் கோயில், மடவார்வளாகம் வைத்தியநாதசுவாமி கோயில், பெரிய மாரியம்மன் கோயில்களில் நவராத்திரி விழா துவங்கியது. ஆண்டாள் கோயிலில் வெள்ளிக்கிழமை குரடு மண்டபத்தில் எழுந்தருளிய ஆண்டாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.மடவார் வளாகம் வைத்தியநாத சுவாமி கோயிலில் சிவகாமி அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்ய,சாகம்பரி அலங்காரத்தில் அம்பாள் எழுந்தருளினார்.பெரிய மாரியம்மன் கோயில் ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X