பொது செய்தி

தமிழ்நாடு

வீட்டு காஸ் சிலிண்டர் விலை 15 ரூபாய் உயர்வு

Added : அக் 07, 2021
Share
Advertisement
சென்னை:வீட்டு சமையல் காஸ் சிலிண்டர் விலை 15 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப, மாதம்தோறும் 1ம் தேதி, உள்நாட்டில் சமையல் காஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் செய்கின்றன.தமிழகத்தில், இம்மாதம் முதல் தேதியன்று வீட்டு சிலிண்டர் விலை மாற்றம் செய்யப்படாமல், முந்தைய மாதத்தில் விற்பனையான 900.50

சென்னை:வீட்டு சமையல் காஸ் சிலிண்டர் விலை 15 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப, மாதம்தோறும் 1ம் தேதி, உள்நாட்டில் சமையல் காஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் செய்கின்றன.தமிழகத்தில், இம்மாதம் முதல் தேதியன்று வீட்டு சிலிண்டர் விலை மாற்றம் செய்யப்படாமல், முந்தைய மாதத்தில் விற்பனையான 900.50 ரூபாயாகவே நிர்ணயிக்கப்பட்டது.

வணிக சிலிண்டர் விலை மட்டும் 36.50 ரூபாய் உயர்ந்து 1,867.50 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று வீட்டு சிலிண்டர் விலை திடீரென 15 ரூபாய் உயர்த்தப்பட்டு 915.50 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. வணிக சிலிண்டர் விலை 2.50 ரூபாய் குறைக்கப்பட்டு, 1,865 ரூபாயாக உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X