இந்தியா

திரிணமுல் காங்.,கை எதிர்த்து களமிறங்க காங்., முடிவு

Updated : அக் 07, 2021 | Added : அக் 07, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
தோழமை கட்சி என்றும் பாராமல், தங்கள் தலைவர்களை வளைத்து வருவதால், ஆத்திரமடைந்துள்ள காங்கிரஸ், மேற்கு வங்கத்தில் இனி நடக்க இருக்கும் இடைத் தேர்தல்களில், வேட்பாளர்களை களமிறக்க முடிவு செய்துள்ளது.மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, காங்., தலைவர்களை, திரிணமுல் காங்., தன் பக்கம் இழுத்து வருவதால், காங்., நிலைமை மிகவும்
திரிணமுல் காங்.,கை எதிர்த்து களமிறங்க காங்., முடிவு

தோழமை கட்சி என்றும் பாராமல், தங்கள் தலைவர்களை வளைத்து வருவதால், ஆத்திரமடைந்துள்ள காங்கிரஸ், மேற்கு வங்கத்தில் இனி நடக்க இருக்கும் இடைத் தேர்தல்களில், வேட்பாளர்களை களமிறக்க முடிவு செய்துள்ளது.மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, காங்., தலைவர்களை, திரிணமுல் காங்., தன் பக்கம் இழுத்து வருவதால், காங்., நிலைமை மிகவும் மோசமாகி வருகிறது.


கலக்கம்



latest tamil news


சமீபத்தில் காங்., மூத்த தலைவரும், கோவா முன்னாள் முதல்வருமான லுசினோ பெலிரோ, திரிணமுல் காங்., கட்சியில் இணைந்தார். அதற்கு முன், காங்., தேசிய மகளிர் அணி தலைவராக இருந்த சுஷ்மிதா தேவ், திரிணமுல் காங்.,கில் இணைந்து, ராஜ்யசபா எம்.பி., பதவியை பெற்றார். இவை, காங்., கட்சியினர் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.வரும் 2024 லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வுக்கு எதிரான அணியை அமைக்கும் முயற்சிகளில், காங்., - திரிணமுல் காங்., உள்ளிட்ட கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. எனினும், தோழமை கட்சியான காங்.,கில் இருந்து தலைவர்களை திரிணமுல் காங்., தன் பக்கம் இழுத்து வருவது, எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் பிளவு ஏற்பட்டுஉள்ளதை காட்டுகிறது.இதனால் கோபமடைந்துள்ள காங்., மேற்கு வங்கத்தில் நடக்க இருக்கும் இடைத் தேர்தல்களில், திரிணமுல் காங்., கட்சிக்கு எதிராக வேட்பாளர்களை நிறுத்த முடிவு செய்துள்ளது.


இடைத்தேர்தல்



வரும் 30ம் தேதி, மேற்கு வங்கத்தின் தின்ஹடா, சந்திபூர், கார்தகா, கொசபா ஆகிய நான்கு சட்டசபை தொகுதிகளில் இடைத்தேர்தல்கள் நடைபெற உள்ளன.இந்த இடைத்தேர்தல்களில், காங்., தன் வேட்பாளர்களை களமிறக்க உள்ளது.சமீபத்தில் நடந்து முடிந்த பவானிபூர் தொகுதிக்கான இடைத்தேர்தலில், மம்தாவுக்கு எதிராக வேட்பாளரை காங்., நிறுத்தாதது குறிப்பிடத்தக்கது.- நமது டில்லி நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Duruvesan - Dharmapuri,இந்தியா
07-அக்-202107:51:40 IST Report Abuse
Duruvesan வேட்பாளர் எங்கே? ராவுலு தேடல்
Rate this:
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
07-அக்-202104:43:39 IST Report Abuse
வெகுளி இப்படியெல்லாம் செய்தால் தீதி காண்டாயி சோனியாவயம் ராகுலையுமே திரிநாமூலில் இணைத்துவிடுவார்.....
Rate this:
Cancel
Aarkay - Pondy,இந்தியா
07-அக்-202101:33:27 IST Report Abuse
Aarkay கான்+க்ராஸை பார்த்து லெட்டர் பேட் கட்சிகள் கூட பயப்படாது. அவர்கள் தனியாய் நின்றால் அசிங்கப்படப்போவதுதான் மிச்சம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X