டாஸ்மாக் மதுக்கடை திறக்காதீர் போலீசில் பொதுமக்கள் மனு

Added : அக் 07, 2021
Share
Advertisement
கோவில்பாளையம் : கீரணத்தத்தில், டாஸ்மாக் மதுக்கடை திறக்க, பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.கீரணத்தத்தில், டாஸ்மாக் கடை திறக்க, ஆரம்பகட்ட பணிகள் நடந்து வருகின்றன.இதற்கு, வெங்கடபதி நகர் மற்றும் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் குடியிருப்போர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், 'டாஸ்மாக் மதுக்கடை அமைய இருக்கும் இடம்,

கோவில்பாளையம் : கீரணத்தத்தில், டாஸ்மாக் மதுக்கடை திறக்க, பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.கீரணத்தத்தில், டாஸ்மாக் கடை திறக்க, ஆரம்பகட்ட பணிகள் நடந்து வருகின்றன.

இதற்கு, வெங்கடபதி நகர் மற்றும் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் குடியிருப்போர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், 'டாஸ்மாக் மதுக்கடை அமைய இருக்கும் இடம், விவசாய நிலம். இதுகுறித்து விசாரித்தால் நில உரிமையாளர் மிரட்டுகிறார்.அருகிலேயே பூங்கா உள்ளது. 1,200 குடும்பங்கள் வசிக்கின்றன. மூன்று புறமும் குடியிருப்புகள் உள்ளன.

இங்கு டாஸ்மாக் கடை திறக்கப்பட்டால், வீண் சச்சரவுகள் ஏற்பட்டு, மக்களின் அமைதி குலையும். கடந்த கிராம சபைக் கூட்டத்திலும் இதை வலியுறுத்தி உள்ளோம். எதிர்ப்பு தெரிவித்து, கலெக்டர் மற்றும் டாஸ்மாக் மேலாளருக்கு கடிதம் எழுதியுள்ளோம்' என்றனர்.இதுகுறித்து, கோவில்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமாரிடம், பொதுமக்கள் மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட இன்ஸ்பெக்டர், சம்பந்தப்பட்ட துறையினருக்கு, மக்களின் கருத்தை தெரிவிப்பதாக, உறுதியளித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X