3 கட்டமாக பேரூராட்சி தேர்தல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

3 கட்டமாக பேரூராட்சி தேர்தல்

Added : அக் 07, 2021
Share
சென்னை:ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிந்ததும், மூன்று கட்டங்களாக பேரூராட்சி தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலுார், திருப்பத்துார், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய ஒன்பது மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கு, தற்போது தேர்தல் நடக்கிறது.சென்னையில் ஊரக உள்ளாட்சி

சென்னை:ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிந்ததும், மூன்று கட்டங்களாக பேரூராட்சி தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலுார், திருப்பத்துார், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய ஒன்பது மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கு, தற்போது தேர்தல் நடக்கிறது.சென்னையில் ஊரக உள்ளாட்சி அமைப்புகள் இல்லாததால், மற்ற மாவட்டங்களில் 2019 டிசம்பரில் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

ஒன்பது மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிந்தவுடன், பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளுக்கு நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும். இத்தேர்தலை நடத்த, மாநில தேர்தல் ஆணையத்திற்கு நான்கு மாத அவகாசத்தை உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது. இதன்படி, 2022 ஜனவரி வரை கால அவகாசம் உள்ளது.

இருப்பினும், ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிந்ததும், பேரூராட்சி தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. மாநிலம் முழுதும் 528 பேரூராட்சிகளில் 8,288 கவுன்சிலர் பதவிகள் உள்ளன. தற்போது, சில பேரூராட்சிகளை, நகராட்சிகளாக அரசு தரம் உயர்த்தியுள்ளது.

எனவே, வார்டு வரையறை பணிகளை மேற் கொள்ள வேண்டி உள்ளது. இப்பணிகளை விரைவில் முடிந்ததும், மூன்று கட்டங்களாக தேர்தலை நடத்துவது தொடர்பான ஆலோசனையில், மாநில தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X