பொது செய்தி

தமிழ்நாடு

ரவுடி வரிச்சியூர் செல்வத்திடம் உறுதிமொழி பத்திரம்

Added : அக் 07, 2021
Share
Advertisement
மதுரை:மதுரையில் பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வத்திடம் 'எந்த குற்ற செயல்களிலும் ஈடுபட மாட்டேன்' என போலீசார் உறுதிமொழி பத்திரம் எழுதி வாங்கியுள்ளனர்.சமீபத்தில் தமிழகம் முழுவதும் போலீசாரின் 'ஆப்பரேஷன் டிஸ்ஆர்ம்' சோதனையில் 2512 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். நுாற்றுக்கணக்கான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து இச்சோதனை நடந்து வரும் நிலையில், மதுரை
 ரவுடி வரிச்சியூர் செல்வத்திடம் உறுதிமொழி பத்திரம்

மதுரை:மதுரையில் பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வத்திடம் 'எந்த குற்ற செயல்களிலும் ஈடுபட மாட்டேன்' என போலீசார் உறுதிமொழி பத்திரம் எழுதி வாங்கியுள்ளனர்.

சமீபத்தில் தமிழகம் முழுவதும் போலீசாரின் 'ஆப்பரேஷன் டிஸ்ஆர்ம்' சோதனையில் 2512 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். நுாற்றுக்கணக்கான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து இச்சோதனை நடந்து வரும் நிலையில், மதுரை மாவட்டத்தில் இதுவரை 313 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 10 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வரிச்சியூர் செல்வம் மீது 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. போலீசாரின் ரவுடி 'லிஸ்ட்'டிலும் உள்ளார். கொரோனா ஊரடங்கால் சில மாதங்களாக சென்னையில் இருந்தார். மதுரை திரும்பிய நிலையில் அவரை எஸ்.பி., பாஸ்கரன் உத்தரவுபடி ஆர்.டி.ஓ., முன் போலீசார் ஆஜர்படுத்தினர். 'எந்த குற்றத்திலும் இனி ஈடுபட மாட்டேன்' என அவரிடம் உறுதிமொழி பத்திரம் எழுதி வாங்கப்பட்டது.

இதை மீறி கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட குற்றச் செயல்களில் செல்வம் ஈடுபடும்பட்சத்தில் எவ்வித விசாரணையுமின்றி சிறையில் அடைக்கப்படுவார். ஜாமினிலும் வெளிவரமுடியாது.

எஸ்.பி., பாஸ்கரன் கூறுகையில், ''மாவட்டத்தில் 50 பேரிடம் உறுதிமொழி பத்திரம் வாங்க உள்ளோம். அதில் ஒருவர்தான் செல்வம். இதுவரை 27 பேரிடம் வாங்கியுள்ளோம். தொடர்ந்து ரவுடிகள் கைது செய்யப்படுவர்'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X