ஆப்கனில் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு

Added : அக் 07, 2021
Share
Advertisement
காபூல்:ஆப்கனில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்டோருக்கு தீவிர ஊட்டசத்து குறைபாடு ஏற்பட்டுள்ளது,'' என, ஐ.நா., சபையின் சிறுவர்கள் நிதியமான யுனிசெப் தெரிவித்துள்ளது.ஆப்கானிஸ்தானை கடந்த ஆக., 15 ல் தலிபான்கள் கைப்பற்றிய பின் உலக நாடுகள் அந்நாட்டுடனான உறவைத் துண்டித்தன. இதனால் அங்கு கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இரண்டு

காபூல்:ஆப்கனில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்டோருக்கு தீவிர ஊட்டசத்து குறைபாடு ஏற்பட்டுள்ளது,'' என, ஐ.நா., சபையின் சிறுவர்கள் நிதியமான யுனிசெப் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானை கடந்த ஆக., 15 ல் தலிபான்கள் கைப்பற்றிய பின் உலக நாடுகள் அந்நாட்டுடனான உறவைத் துண்டித்தன. இதனால் அங்கு கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இரண்டு நாள் பயணமாக ஆப்கன் சென்ற ஐ.நா.,வின் யுனிசெப் அமைப்பின் ஆப்கனுக்கான பிரதிநிதி ஹெர்வெ லுடோவிக் டே லிஸ், உலக உணவுத் திட்டத்தின் ஆப்கனுக்கான பிரதிநிதி மேரி எல்லென் மெக்கோர்ட் ஆகியோர் தெரிவித்துள்ளதாவது:

ஆப்கனில் 95 சதவீத வீடுகளில் போதிய உணவு இல்லை. இதனால் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்டோருக்கு தீவிர ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டுள்ளது. குழந்தைகளுக்காக பெற்றோர், பெரியவர்கள் சில வேளை உணவுகளை தியாகம் செய்கிறார்கள்.

சர்வதேச சமூகம் உடனடியாக ஆப்கன் குழந்தைகளுக்காக தாராளமாக நிதிகளை விடுவிக்க வேண்டும். இல்லாவிட்டால் ஆப்கனில் ஊட்டச்சத்து குறைபாடு மிக மோசமான பிரச்னையாக உருவெடுக்கும்; ஒரு மில்லியன் குழந்தைகள் உயிரிழக்கும் அபாயம் உருவாகும், என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X