பொது செய்தி

தமிழ்நாடு

எரிபொருள் மையங்களாக மாறும் பெட்ரோல் பங்க்குகள்

Added : அக் 07, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை:''பெட்ரோல், டீசல் மட்டுமின்றி, வாகன எரிவாயு, பேட்டரி சார்ஜிங் கிடைக்கும் மையங்களாக, பெட்ரோல் பங்க்குகள் மாற்றப்படும்,'' என, இந்தியன் ஆயில் நிறுவன ஆராய்ச்சி மேம்பாட்டு பிரிவு இயக்குனர் ராமகுமார் தெரிவித்தார்.அவரது பேட்டி:கரும்பு, நெல், பருத்தி சக்கைகளில் இருந்து எத்தனால் தயாரிக்கப்படுகிறது. தற்போது பெட்ரோலில், 10 சதவீதம் எத்தனால் கலக்க அனுமதி அளிக்கப்பட்டு

சென்னை:''பெட்ரோல், டீசல் மட்டுமின்றி, வாகன எரிவாயு, பேட்டரி சார்ஜிங் கிடைக்கும் மையங்களாக, பெட்ரோல் பங்க்குகள் மாற்றப்படும்,'' என, இந்தியன் ஆயில் நிறுவன ஆராய்ச்சி மேம்பாட்டு பிரிவு இயக்குனர் ராமகுமார் தெரிவித்தார்.

அவரது பேட்டி:கரும்பு, நெல், பருத்தி சக்கைகளில் இருந்து எத்தனால் தயாரிக்கப்படுகிறது. தற்போது பெட்ரோலில், 10 சதவீதம் எத்தனால் கலக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இது, அடுத்த ஐந்து ஆண்டுகளில் 20 சதவீதமாக அதிகரிக்கப்படும்.அதற்கு ஏற்ப வாகன இன்ஜின்களின் திறனை மேம்படுத்துமாறு, வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்தியன் ஆயில் ஆராய்ச்சி பிரிவு, 20 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோல் வழங்குவதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. பெட்ரோல், டீசலுக்கு மாற்றாக, எரிவாயு, 'பேட்டரி'யில் இயங்கும் வாகனங்கள் ஊக்குவிக்கப்பட்டு வருகின்றன. எனவே, பெட்ரோல், டீசலுடன், மாசு ஏற்படுத்தாத வாகன எரிவாயு, 'பேட்டரி சார்ஜிங்' செய்யும் வசதி, பேட்டரி மாற்றும் வசதி என, பல எரிபொருட்கள் கிடைக்கும் மையங்களாக பெட்ரோல் பங்க்குகள் மாற்றப்படும்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப, சமையல் காஸ் சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. எனவே, கச்சா எண்ணெய் விலை அதிகம் இருப்பதால், சிலிண்டர் விலை அதிகரித்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார். இந்தியன் ஆயில் நிறுவன செயல் இயக்குனர் ஜெயதேவன் உடனிருந்தார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானதேசிகன் புள்ள வேணுமா போ பெட்ரோல் பங்குக்கு பொண்டாட்டி வேணுமா போ பெட்ரோல் பங்குக்கு ன்னு வந்துடுமோ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X