சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பிரபல ஜவுளி கடையில் 2வது நாளாக சோதனை

Added : அக் 07, 2021
Share
Advertisement
சென்னை:சென்னை, காஞ்சிபுரம், வேலுார் மாவட்டங்களில், பிரபல துணிக்கடை மற்றும் நிதி நிறுவனத்தில், இரண்டாவது நாளாக நேற்றும் வருமான வரித்துறை சோதனை தொடர்ந்தது.காஞ்சிபுரத்தில் பழமையான ஜவுளிக்கடை, தற்போது சென்னை உட்பட, பல இடங்களில் இயங்கி வருகிறது. இவற்றில் வரி ஏய்ப்பு நடந்ததாக வருமான வரித்துறைக்கு தகவல் கிடைத்தது.துணிக்கடை உரிமையாளர் வீடு, கடை, சென்னை தி.நகர், வேலுாரில்

சென்னை:சென்னை, காஞ்சிபுரம், வேலுார் மாவட்டங்களில், பிரபல துணிக்கடை மற்றும் நிதி நிறுவனத்தில், இரண்டாவது நாளாக நேற்றும் வருமான வரித்துறை சோதனை தொடர்ந்தது.

காஞ்சிபுரத்தில் பழமையான ஜவுளிக்கடை, தற்போது சென்னை உட்பட, பல இடங்களில் இயங்கி வருகிறது. இவற்றில் வரி ஏய்ப்பு நடந்ததாக வருமான வரித்துறைக்கு தகவல் கிடைத்தது.துணிக்கடை உரிமையாளர் வீடு, கடை, சென்னை தி.நகர், வேலுாரில் உள்ள ஜவுளிக்கடைகளில், வருமான வரித்துறை அதிகாரிகள், சோதனையை துவங்கினர்.

இந்த சோதனை நேற்றும் நீடித்தது.இதேபோல, சென்னை மற்றும் காஞ்சிபுரத்தில் செயல்படக் கூடிய நிதி நிறுவன இயக்குனர்கள் வீடுகள், உறவினர்கள் வீடுகள், அலுவலகங்களில், நேற்றும் சோதனை தொடர்ந்தது. தமிழகத்தில் மொத்தம், 22 இடங்களில் நடந்த சோதனை நேற்று, 15 இடங்களாக குறைந்தது. சோதனையில், கணக்கில் காட்டப்படாத சொத்து ஆவணங்கள், பண பரிவத்தனைகள் தொடர்பான ஆவணங்கள், ரொக்கம் ஆகியவை கைப்பற்றப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X