பொது செய்தி

தமிழ்நாடு

அரசு கேபிளுக்கு கட்டண பாக்கி வசூலிக்க 'கறார்' உத்தரவு

Added : அக் 07, 2021
Share
Advertisement
திருப்பூர் : அரசு கேபிள் நிறுவனத்துக்கு செலுத்த வேண்டிய கட்டண பாக்கியை, வருவாய் வசூல் சட்டப்படி வசூலிக்க, அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனம் சார்பில், 2011 முதல், 2018 ஜூலை வரை, 'செட்டாப் பாக்ஸ்' இல்லாமல், கேபிள் மூலமாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. கேபிள் டிவி நிறுவனத்தில் பதிவு செய்த ஆபரேட்டர்களுக்கு, கேபிள் ஒளிரப்பு வசதி

திருப்பூர் : அரசு கேபிள் நிறுவனத்துக்கு செலுத்த வேண்டிய கட்டண பாக்கியை, வருவாய் வசூல் சட்டப்படி வசூலிக்க, அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனம் சார்பில், 2011 முதல், 2018 ஜூலை வரை, 'செட்டாப் பாக்ஸ்' இல்லாமல், கேபிள் மூலமாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. கேபிள் டிவி நிறுவனத்தில் பதிவு செய்த ஆபரேட்டர்களுக்கு, கேபிள் ஒளிரப்பு வசதி செய்யப்பட்டது.ஆபரேட்டர்கள், அதன் அடிப்படையில், அரசுக்கு கட்டணம் செலுத்தி வந்தனர். அவ்வகையில், 2011 முதல், 2018 வரையில், நிலுவையில் உள்ள, கட்டண பாக்கியை வசூலிக்க, கேபிள் டிவி நிறுவனம், அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.இதுகுறித்து கேபிள் டிவி நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:'செட்டாப் பாக்ஸ்' பெறாமல், 2018 ஜூலை வரை அரசு கேபிள் ஒளிரப்பிய ஆபரேட்டர்களின் நிலுவை தொகையை, வருவாய் வசூல் சட்டத்தில் வசூலிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வருகிறது. கலெக்டர் அலுவலகத்தில், பட்டியலை பெறும் தாசில்தார்கள், சட்டப்படி அரசுக்கு சேர வேண்டிய தொகையை வசூலிக்க உள்ளனர். தேவை ஏற்பட்டால், 'ஜப்தி' நோட்டீஸ் அனுப்பி, நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X