2050க்குள் 500 கோடி மக்களுக்கு தண்ணீர் கிடைப்பதில் சிக்கல்

Added : அக் 07, 2021
Share
Advertisement
ஜெனிவா:'உலகளவில் வரும் 2050க்குள் 500 கோடி மக்களுக்கு தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும்' என ஐ.நா., எச்சரித்துள்ளது.ஐ.நா.,வின் உலக வானிலை அமைப்பு (டபிள்யு.எம்.ஓ.,) 'தண்ணீருக்கான 2021ம் ஆண்டுக்கான காலநிலை சேவைகள்' என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:கடந்த 20 ஆண்டுகளாக ஆண்டுக்கு 1 செ.மீ., அளவில் மண்ணில் ஈரப்பதம் குறைதல், பனி உறைதல், நிலப்பரப்பில்

ஜெனிவா:'உலகளவில் வரும் 2050க்குள் 500 கோடி மக்களுக்கு தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும்' என ஐ.நா., எச்சரித்துள்ளது.ஐ.நா.,வின் உலக வானிலை அமைப்பு (டபிள்யு.எம்.ஓ.,) 'தண்ணீருக்கான 2021ம் ஆண்டுக்கான காலநிலை சேவைகள்' என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

கடந்த 20 ஆண்டுகளாக ஆண்டுக்கு 1 செ.மீ., அளவில் மண்ணில் ஈரப்பதம் குறைதல், பனி உறைதல், நிலப்பரப்பில் நீர் குறைதல், நீர் தேங்கிவைத்தல் குறைவு போன்றவை நிகழ்ந்து உள்ளன. மேலும் பருவநிலை மாறுபாடால் தண்ணீர் தொடர்பான பேரிடர்களான பெருவெள்ளம், பஞ்சம், தண்ணீர் பற்றாக்குறை போன்ற சிக்கல்கள் வரும் காலத்தில் ஏற்படும்.தற்போது உலகளவில் தண்ணீர் பாதுகாப்பு, சேமிப்பு மோசமான நிலையில் உள்ளது.

கடந்த 20 ஆண்டுகளாக தண்ணீரை அசுத்தப்படுத்துவது, அதனால் ஏற்படும் ஆபத்து அதிகரித்து உள்ளது. தற்போது பூமியில் உள்ள தண்ணீரில் 0.5 சதவீதம் மட்டுமே பயன்படுத்தப்படாமல் சுத்தமான நீராக இருக்கிறது.கடந்த 2018ல் ஆண்டில் ஒரு மாதம் 360 கோடி பேர் தண்ணீர் பற்றாக்குறையைச் சந்தித்தனர். இது 2050க்குள் 500 கோடியாக உயரும். அதனால் கூட்டுறவு நீர் மேலாண்மை, ஒருங்கிணைந்த நீர் மற்றும் காலநிலை கொள்கைகளைக் கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X