சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போதைப் பொருள் கடத்தல் முன்னாள் விடுதலை புலி கைது

Added : அக் 07, 2021
Share
Advertisement
சென்னை:இலங்கைக்கு போதைப் பொருட்கள் கடத்தல் வழக்கில், இலங்கை தமிழரை, சென்னையில் தேசிய புலனாய்வு பிரிவான, என்.ஐ.ஏ., அதிகாரிகள் கைது செய்து உள்ளனர்.கேரளா மாநிலம், திருவனந்தபுரம் அருகே, விழிஞ்ஞம் கடற்பகுதியில், மார்ச்சில், 300 கிலோ ஹெராயின், 'ஏகே 47' துப்பாக்கி மற்றும் 1,000 தோட்டாக்களுடன் வந்த படகை, என்.ஐ.ஏ., அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இவற்றை, ஈரான், பாகிஸ்தானில் இருந்து,

சென்னை:இலங்கைக்கு போதைப் பொருட்கள் கடத்தல் வழக்கில், இலங்கை தமிழரை, சென்னையில் தேசிய புலனாய்வு பிரிவான, என்.ஐ.ஏ., அதிகாரிகள் கைது செய்து உள்ளனர்.

கேரளா மாநிலம், திருவனந்தபுரம் அருகே, விழிஞ்ஞம் கடற்பகுதியில், மார்ச்சில், 300 கிலோ ஹெராயின், 'ஏகே 47' துப்பாக்கி மற்றும் 1,000 தோட்டாக்களுடன் வந்த படகை, என்.ஐ.ஏ., அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இவற்றை, ஈரான், பாகிஸ்தானில் இருந்து, இந்தியா வழியாக, இலங்கைக்கு கடத்த முயன்றது தெரிய வந்தது.

இது தொடர்பாக, இலங்கையை சேர்ந்த ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து, மே மாதத்தில், சுரேஷ், சவுந்தர்ராஜன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து, தடை செய்யப்பட்ட அமைப்பான, விடுதலை புலிகள் தொடர்பான புத்தகங்கள், மொபைல் போன்கள் உள்ளிட்ட ஏழு 'டிஜிட்டல்' சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

விசாரணையில், ஈரானில் இருந்தும், பாகிஸ்தானில் இருந்தும் ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் போதைப் பொருட்கள் கடத்தலில் ஈடுபட்ட குற்றவாளிகள், தமிழகம், கேரளாவில் பதுங்கி யிருப்பது தெரிய வந்தது. அதன் அடிப்படையில், சென்னை, வளசரவாக்கம் பகுதியில் உள்ள, முரளி கிருஷ்ணா தாஜ் அடுக்குமாடி குடியிருப்பின் முதல் தளத்தில், சற்குணம் என்ற சபேசன், 47, என்பவர் தங்கியிருப்பதை கண்டுபிடித்தனர்.

இவர், விடுதலை புலிகள் உளவு அமைப்பை சேர்ந்த முன்னாள் நிர்வாகி என்பதும், புலிகள் அமைப்புக்கு புத்துயிர் அளிக்க, ஆயுதங்கள், போதைப் பொருட்கள் கடத்தலில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.இதையடுத்து, என்.ஐ.ஏ., அதிகாரிகள், சற்குணத்தை நேற்று முன்தினம் கைது செய்தனர். இவர், விடுதலை புலிகள் அமைப்பின் மறுமலர்ச்சிக்காக செயல்பட்டு வந்ததாக, என்.ஐ.ஏ., அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X