கோர்ட் செய்தி

தமிழ்நாடு

ஜவ்வரிசியில் கலப்படமா?

Added : அக் 07, 2021
Share
Advertisement
சென்னை:ஜவ்வரிசியில் கலப்படம் உள்ளதா என்பதை ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்படி, உணவு பாதுகாப்புத் துறைக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த நடராஜன் என்பவர் தாக்கல் செய்த மனு:வெள்ளை நிறத்தில் பளிச்சென தெரிவதற்காக, ஜவ்வரிசி தயாரிக்கும்போது, ரசாயன பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. கலப்பட ஜவ்வரிசியால் உடல்நலம் பாதிக்கப்படுகிறது.

சென்னை:ஜவ்வரிசியில் கலப்படம் உள்ளதா என்பதை ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்படி, உணவு பாதுகாப்புத் துறைக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த நடராஜன் என்பவர் தாக்கல் செய்த மனு:வெள்ளை நிறத்தில் பளிச்சென தெரிவதற்காக, ஜவ்வரிசி தயாரிக்கும்போது, ரசாயன பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. கலப்பட ஜவ்வரிசியால் உடல்நலம் பாதிக்கப்படுகிறது. இது குறித்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ரசாயன கலப்பை தடுக்க உத்தரவிட்டது.

ஈரப்பதமான மரவள்ளிக் கிழங்கு மாவை தயாரிக்க அனுமதி வழங்கி, 2016ல் உணவு பாதுகாப்பு ஆணையர் உத்தரவு பிறப்பித்தார். ஏற்கனவே நீதிமன்றம் தடை விதித்திருந்தும், அதை மீறும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதை ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனு, நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன், விசாரணைக்கு வந்தது. வெவ்வேறு கடைகளில் வாங்கப்பட்ட மூன்று மாதிரி ஜவ்வரிசியை, உணவு பாதுகாப்புத் துறை உதவியாளரிடம் வழங்கி, சென்னை கிண்டியில் உள்ள பரிசோதனை கூடத்தில் சோதிக்கும்படி, நீதிபதி கூறினார்.

மூன்று மாதிரிகளையும் பரிசோதித்து, அவற்றின் தன்மை, பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள், உடல் நல பிரச்னைகள் தொடர்பாக கருத்து பெற்று, அறிக்கையாக தாக்கல் செய்யும்படி, உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிக்கு, நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X