குடும்ப வன்முறைச் சட்ட வழக்கு: உயர்நீதிமன்றம் உத்தரவு| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

குடும்ப வன்முறைச் சட்ட வழக்கு: உயர்நீதிமன்றம் உத்தரவு

Added : அக் 07, 2021
Share
மதுரை:மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள குடும்ப வன்முறைச் சட்ட வழக்குகளை சிவில் அல்லது குடும்பநல நீதிமன்றத்திற்கு மாற்ற முடியுமா என்பதற்கு தீர்வு காண கூடுதல் நீதிபதிகள் அமர்வு ஏற்படுத்த தலைமை நீதிபதிக்கு பரிந்துரைக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.குடும்ப வன்முறைச் சட்டத்தின் கீழ் கீழமை நீதிமன்றங்களில் தொடரப்பட்ட வழக்குகளை ரத்து

மதுரை:மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள குடும்ப வன்முறைச் சட்ட வழக்குகளை சிவில் அல்லது குடும்பநல நீதிமன்றத்திற்கு மாற்ற முடியுமா என்பதற்கு தீர்வு காண கூடுதல் நீதிபதிகள் அமர்வு ஏற்படுத்த தலைமை நீதிபதிக்கு பரிந்துரைக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

குடும்ப வன்முறைச் சட்டத்தின் கீழ் கீழமை நீதிமன்றங்களில் தொடரப்பட்ட வழக்குகளை ரத்து செய்யக்கோரி சிலர் மனு செய்தனர்.நீதிபதி கே.முரளிசங்கர் உத்தரவு: குடும்ப வன்முறைச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்து மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை சிவில் அல்லது குடும்பநல நீதிமன்றத்திற்கு மாற்றுவது குறித்து இந்நீதிமன்றத்தின் வெவ்வேறு அமர்வுகள் மாறுபட்ட கருத்துக்களை வெளியிட்டுள்ளன.

இதில் ஒரு முடிவை எட்ட வேண்டியுள்ளது. இந்நீதிமன்றத்தின் முன் கீழ்க்கண்ட கேள்விகள் எழுகின்றன.குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் மாஜிஸ்திரேட் நீதிமன்றங்களில் தாக்கல் செய்த வழக்குகளை சிவில் அல்லது குற்றவியல் நடவடிக்கை வழக்காக கருதுவதா.சிவில் வழக்காக கருதினால் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் (சி.ஆர்.பி.சி.,) உயர்நீதிமன்றம் தனது அதிகாரத்தை பயன்படுத்தி உத்தரவு பிறப்பிக்க முடியுமா.

சி.ஆர்.பி.சி., பொருந்தாது என கருதினால், குடும்ப வன்முறைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்வதற்கான கால வரம்பு என்ன.இச்சட்டத்தின் கீழ் தாக்கலாகி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை அரசியலமைப்புச் சட்டப் பிரிவை பயன்படுத்தி சிவில் நீதிமன்றம் அல்லது குடும்பநல நீதிமன்றத்திற்கு மாற்ற முடியுமா என்பதற்கு தீர்வு காண கூடுதல் நீதிபதிகள் அமர்வு ஏற்படுத்த தலைமை நீதிபதியின் பரிசீலனைக்கு பரிந்துரைக்க பதிவுத்துறைக்கு உத்தரவிடப்படுகிறது என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X