அரசியல் செய்தி

தமிழ்நாடு

'-பிரதமரின் தமிழ் முழக்கம்' புத்தகம் வெளியீடு

Added : அக் 07, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
சென்னை:'வணக்கம் தமிழகம் - பிரதமரின் தமிழ் முழக்கம்' என்ற புத்தக வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.'ப்ளூ ஓஷன் புக்ஸ்' மற்றும் அகண்ட தமிழ் உலகம் ஆகிய அமைப்புகள் இணைந்து, 'வணக்கம் தமிழகம் -- பிரதமரின் தமிழ் முழக்கம்' என்ற புத்தகத்தை வெளியிட்டுள்ளன. மத்திய அமைச்சர் சென்னையில் நடந்த நிகழ்ச்சியில், மத்திய வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்திர்
 '-பிரதமரின் தமிழ் முழக்கம்' புத்தகம் வெளியீடு

சென்னை:'வணக்கம் தமிழகம் - பிரதமரின் தமிழ் முழக்கம்' என்ற புத்தக வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

'ப்ளூ ஓஷன் புக்ஸ்' மற்றும் அகண்ட தமிழ் உலகம் ஆகிய அமைப்புகள் இணைந்து, 'வணக்கம் தமிழகம் -- பிரதமரின் தமிழ் முழக்கம்' என்ற புத்தகத்தை வெளியிட்டுள்ளன. மத்திய அமைச்சர் சென்னையில் நடந்த நிகழ்ச்சியில், மத்திய வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்திர் யாதவ், காணொலி வாயிலாக புத்தகத்தை வெளியிட்டார்.

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பா.ஜ., தேசிய பொதுச் செயலர் சி.டி.ரவி ஆகியோர் காணொலி வாயிலாக பங்கேற்றனர்.தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன், மாநில இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி ஆகியோர் பங்கேற்றனர்.

அண்ணாமலை பேசியதாவது:பிரதமர் மோடி குஜராத் முதல்வராக 13 ஆண்டுகள்; பிரதமராக, 7 ஆண்டுகள் என, இன்றுடன், 20 ஆண்டு அரசியல் பயணத்தை பூர்த்தி செய்கிறார். இதில், குஜராத் முதல்வராக இருந்தபோது, மோடி தமிழகத்திற்கு வந்து முதன்முதலில் பேசிய விஷயங்கள் என, அனைத்தும் புத்தகத்தில் உள்ளன. பிரதமரான பின், பல முறை தமிழகம் வந்ததுடன், பல திட்டங்களையும் கொண்டு வந்துள்ளார்.

'மனதின் குரல்' என்ற நிகழ்ச்சியில் பிரதமர் 81 முறை பேசியுள்ளார். இதில் 71 முறை தமிழகத்தை பல்வேறு கோணங்களில் தொட்டுள்ளார்.திருக்குறள்மேலும், பல்வேறு இடங்களில் திருக்குறள் குறித்து 33 முறையும், பாரதியார் குறித்து 9 முறையும் பேசியுள்ளார். தமிழகத்தில் உள்ள எந்த அரசியல் தலைவரும் இந்த அளவிற்கு திருக்குறள் மற்றும் பாரதியார் குறித்து பேசவில்லை.தமிழர்கள் மற்றும் தமிழ் மொழியுடன், பிரதமர் எப்போதும் தொடர்பில் இருந்து வருகிறார்.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Venkatakrishnan - Mumbai,இந்தியா
07-அக்-202121:59:43 IST Report Abuse
Venkatakrishnan ஆளுங்கட்சியோட கூட்டணி வச்சு பிச்சை எடுத்து வாங்குன 4 MLA சீட்டை வச்சுக்கிட்டு இவனுங்க விடுற அலப்பறை இருக்கே... அப்பப்பா... மோடி பிரச்சாரத்திற்கு தமிழகம் வருவதை விரும்பாத இந்த சங்கி கும்பல் இன்று அவரை துதிபாடி ஒரு புத்தகம் வெளியிட்டு இருப்பது இவர்களின் பகல்வேஷத்தை காட்டுகிறது...
Rate this:
Cancel
தமிழன் - தமிழ்நாடு, இந்திய ஒன்றியம்,இந்தியா
07-அக்-202115:56:05 IST Report Abuse
தமிழன் இந்த விளம்பரத்திற்கு எவ்வளவு செலவு??? இன்னும் நன்றாக நடித்திருக்கலாம் ..
Rate this:
Cancel
Bala - chennai,இந்தியா
07-அக்-202114:06:26 IST Report Abuse
Bala . எங்களுக்கு தமிழும் தெரியாது இந்தியும் தெரியாது. அந்நிய மொழியான ஆங்கிலமும் தெரியாது தலைவா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X