கோர்ட் செய்தி

தமிழ்நாடு

நீத்தார் நினைவு கூடத்திற்கு எதிர்ப்பு: பரிசீலிக்க உத்தரவு

Added : அக் 07, 2021
Share
Advertisement
சென்னை:பொதுக்குளத்தில் நீத்தார் நினைவு கூடம் கட்டுவதற்கு தடை கோரிய மனுவை ஆராய்ந்து முடிவெடுக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கடலுார் மாவட்டம், உளுதுார் கிராமத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் சுந்தர்ராஜ் என்பவர் தாக்கல் செய்த மனு:எங்கள் கிராமத்தில் உள்ள வச்சானி அம்மன் பொதுக்குளத்து நீர், விவசாயம், கால்நடைக்கு பயன்படுகிறது. 10 ஏக்கர் பரப்பில் இந்த குளம்

சென்னை:பொதுக்குளத்தில் நீத்தார் நினைவு கூடம் கட்டுவதற்கு தடை கோரிய மனுவை ஆராய்ந்து முடிவெடுக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடலுார் மாவட்டம், உளுதுார் கிராமத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் சுந்தர்ராஜ் என்பவர் தாக்கல் செய்த மனு:எங்கள் கிராமத்தில் உள்ள வச்சானி அம்மன் பொதுக்குளத்து நீர், விவசாயம், கால்நடைக்கு பயன்படுகிறது. 10 ஏக்கர் பரப்பில் இந்த குளம் உள்ளது. குளத்தின் ஒரு பகுதியை காய வைத்து, நீத்தார் நினைவு கூடம் கட்டுகின்றனர். இதனால், கிராம மக்கள் பாதிக்கப்படுவர்.

கால்நடைகளும் பாதிக்கும்.அரசு புறம்போக்கு நிலத்தில் நீத்தார் நினைவு கூடம் கட்டலாம். ஆனால், அந்த நிலம் கிராம பஞ்சாயத்து துணை தலைவரின் ஆக்கிரமிப்பில் உள்ளது. அதனால் அந்த இடத்தை தவிர்த்து விட்டனர். நீர்நிலைகளில் கட்டுமானம் மேற்கொள்ளக் கூடாது என, உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்ற உத்தரவுகள் உள்ளன. எ

னவே, குளத்தில் நீத்தார் நினைவு கூடம் கட்டுவதை நிறுத்த உத்தரவிட வேண்டும். இது குறித்த என் மனு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனு, நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், சத்திகுமார் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. இறந்தவர்களுக்காக மேற்கொள்ளப்படும் சடங்குகள், குளம் மற்றும் ஆற்றின் கரைகளில் பொதுவாக நடக்கும் என்றாலும், குளத்துக்கு வரும் தண்ணீர் போக்கு தடைபடாமல் இருப்பதை, அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என, நீதிபதிகள் தெரிவித்தனர். மனு தாரரின் கோரிக்கை குறித்து ஆராய்ந்து உரிய முடிவெடுக்கும்படி, மாவட்ட நிர்வாகத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X