பொது செய்தி

தமிழ்நாடு

முதல்வர் அறிவிப்புகள் அரசு ஊழியர் எதிர்பார்ப்பு

Added : அக் 07, 2021
Share
Advertisement
மதுரை:சத்துணவு சமையலர் ஓய்வு வயது அதிகரிப்பு, வேலைநிறுத்த காலத்தை பணிக்காலமாக கருதுவது என முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் 110 விதியின் கீழ் அறிவித்தவற்றை அரசாணையாக வெளியிட வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியர்கள் எதிர்பார்க்கின்றனர்.சட்டசபை பட்ஜெட் கூட்டத்தின் போது இந்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டும், இதுவரை அரசாணை வெளிவரவில்லை. தற்போது சத்துணவு சமையலர், உதவியாளர்கள் 58

மதுரை:சத்துணவு சமையலர் ஓய்வு வயது அதிகரிப்பு, வேலைநிறுத்த காலத்தை பணிக்காலமாக கருதுவது என முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் 110 விதியின் கீழ் அறிவித்தவற்றை அரசாணையாக வெளியிட வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியர்கள் எதிர்பார்க்கின்றனர்.

சட்டசபை பட்ஜெட் கூட்டத்தின் போது இந்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டும், இதுவரை அரசாணை வெளிவரவில்லை. தற்போது சத்துணவு சமையலர், உதவியாளர்கள் 58 வயதானதும் ஓய்வு பெற அதிகாரிகள் அனுமதிக்கின்றனர். முதல்வர் அறிவித்தபடி அவர்களது ஓய்வு வயது 60 ஆக உயர்த்தப்படவில்லை.

மதுரையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில பொது செயலாளர் செல்வம் கூறியதாவது: முதல்வரின் சட்டசபை அறிவிப்புகளை அரசாணையாக வெளியிட்டால் தான் உண்மையான பலன் அரசு ஊழியர்களை சேரும். மாநிலத்தில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்துவதை சங்கம் வரவேற்கிறது.

அதே நேரத்தில் விடுமுறையின்றி அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை ஞாயிறு அன்றும் துறை ரீதியான பணிகளில் ஈடுபடுத்துவதை சங்கம் கண்டிக்கிறது. நிதி ஒதுக்கீடு இன்றி மெகா தடுப்பூசி முகாம்களை நடத்தவும் அரசு நிர்பந்திக்கிறது. குறிப்பிட்ட அளவு தடுப்பூசி செலுத்த அரசு நிர்பந்திப்பதால் சுகாதார செவிலியர்கள் விபத்தில் சிக்கும் அவலம் நிலவுகிறது, என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X