பொது செய்தி

தமிழ்நாடு

பி.எச்., பதிவெண் துவங்குவது எப்போது?

Added : அக் 07, 2021
Share
Advertisement
சென்னை:பல மாநிலங்களில் வாகனங்களுக்கான, பி.எச்., பதிவெண் துவங்கியுள்ள நிலையில், தமிழகத்தில் எப்போது துவங்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.மாநிலங்களுக்கு இடையிலான, சொந்த வாகன பயன்பாட்டை எளிதாக்கும் வகையில், மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் பி.எச்., எனும், புதிய பதிவெண் முறையை அறிமுகப்படுத்தி உள்ளது. இதை, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்கள் நடைமுறைப்படுத்த துவங்கி

சென்னை:பல மாநிலங்களில் வாகனங்களுக்கான, பி.எச்., பதிவெண் துவங்கியுள்ள நிலையில், தமிழகத்தில் எப்போது துவங்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மாநிலங்களுக்கு இடையிலான, சொந்த வாகன பயன்பாட்டை எளிதாக்கும் வகையில், மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் பி.எச்., எனும், புதிய பதிவெண் முறையை அறிமுகப்படுத்தி உள்ளது. இதை, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்கள் நடைமுறைப்படுத்த துவங்கி விட்டன.

தமிழகத்தில் இதுகுறித்த அறிவிப்பு எதையும், போக்குவரத்து துறை வெளியிடவில்லை. மத்திய அரசு ஊழியர்கள், வணிகர்கள் உள்ளிட்டோர் அடிக்கடி மாநிலம் விட்டு மாநிலம் இடம் பெயர்வர். அவர்கள் பயன்படுத்தும் வாகனத்தை, அதிகப்படியாக 12 மாதங்கள் வரை மட்டுமே, பதிவு செய்த மாநிலத்தில் இருந்து அடுத்த மாநிலத்தில் பயன்படுத்த முடியும்.

அதற்கு மேல் பயன்படுத்துவது என்றால், புதிய மாநிலத்தில் மீண்டும் பதிவு செய்து, புதிய பதிவெண் பெற வேண்டும்.அதற்கு, பதிவு மாவட்டத்தில் இருந்து தடையில்லா சான்று, சாலை வரி உள்ளிட்டவற்றின் நிலுவையில்லா சான்று பெற்று, புதிய மாநில ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். பின், புதிய மாநிலத்தின் சட்ட திட்டத்தின்படி வரிகளை செலுத்த வேண்டும்.

இதுபோல், அடிக்கடி மாநிலம் விட்டு மாநிலம் இடம்பெயர்வோர், வாகன பதிவெண்ணை மாற்றுவதில் சிரமங்களை அனுபவிக்கின்றனர். இதற்கு பதில், பி.எச்., எனும் புதிய பதிவெண் முறையில், புதிய வாகனங்களை பதிவு செய்தால், நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் வாகனத்தை சட்டச் சிக்கல் இல்லாமல் இயக்க முடியும். இந்த பதிவெண் பலகையில், பதிவு செய்யும் ஆண்டு, பி.எச்., வரிசை எண், வாகன பதிவெண், ஆங்கில அகர வரிசை என்ற அடிப்படையில் அமைக்கப்படும்.

இதற்கான வாகன வரியை, இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை செலுத்த வேண்டும். இவ்வாறு பதிவு செய்யும் வாகனங்களை, நாட்டில் எந்த மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்திலும் பதிவெண் மாற்றாமல் பயன்படுத்தலாம். இத்திட்டம், பாதுகாப்பு துறையினர், மத்திய மாநில அரசு பணியாளர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள், வர்த்தகர்கள் என, பல தரப்பினருக்கும் பயனளிக்கும். 'இந்த பதிவெண் முறை குறித்து, பொது மக்களுக்கு அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தி, விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்' என, வாகன உரிமையாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X