அரசியல் செய்தி

தமிழ்நாடு

553 கோவில்களை மேம்படுத்த வரைவு திட்டம்: சேகர்பாபு

Added : அக் 07, 2021
Share
Advertisement
சென்னை:''தமிழகத்தில் பக்தர்கள் அதிகம் செல்லும் 553 கோவில்களை மேம்படுத்த வரைவு திட்டம் தயாரிக்கப்படும். ஓராண்டில் 300 கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்படும்,'' என, ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.சென்னை வடபழநி ஆண்டவர் கோவில், ஆதிமூலப் பெருமாள் கோவிலில், அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார். பூஜைப் பொருட்கள், மலர் மாலை கடைகளை திறந்து வைத்தார்.
 553 கோவில்களை மேம்படுத்த வரைவு திட்டம்: சேகர்பாபு

சென்னை:''தமிழகத்தில் பக்தர்கள் அதிகம் செல்லும் 553 கோவில்களை மேம்படுத்த வரைவு திட்டம் தயாரிக்கப்படும். ஓராண்டில் 300 கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்படும்,'' என, ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

சென்னை வடபழநி ஆண்டவர் கோவில், ஆதிமூலப் பெருமாள் கோவிலில், அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார். பூஜைப் பொருட்கள், மலர் மாலை கடைகளை திறந்து வைத்தார். பின், அவர் அளித்த பேட்டி:வடபழநி ஆண்டவர் கோவிலில் கும்பாபிஷேகத்திற்காக 2.56 கோடி ரூபாயில், 34 திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. திருப்பணிகள் நிறைவு பெற்றதும், கும்பாபிஷேகம் நடத்தப்படும்.

இந்த கோவிலில் கோபுர தரிசனத்தை பக்தர்கள் காண வசதியாக, முகப்பில் உள்ள இரும்பு கூரைகள் அகற்றப்பட்டு வருகின்றன.பக்தர்கள் வசதிக்காக, 16 கோடி ரூபாயில் ஒருங்கிணைந்த திருமண மண்டபங்கள், 9 கோடி ரூபாயில் அன்னதானக் கூடங்கள், முடி காணிக்கை செலுத்தும் இடம் அமைய உள்ளது.மேலும், 2 கோடி ரூபாயில் பல்நோக்கு கட்டடங்கள், 40 கோடி ரூபாயில் அர்ச்சகர்களுக்கு குடியிருப்புகள் கட்டுதல் ஆகிய பணிகளுக்கான வரைவு திட்டம் தயாரிக்கப்பட்டு பணிகள் துவக்கப்படும்.

ஆதிமூலப் பெருமாள் கோவில் முகப்பு பகுதியில் ஆக்கிரமித்து தொழில் நடத்தும் ஏழை, எளிய மக்களுக்காக 8 லட்சம் ரூபாய் செலவில் தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. அக்கோவிலுக்கும் திருப்பணிக்கான திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு வருகிறது. திருச்செந்துார் கோவிலில் 150 கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு பணிகள் துவங்க உள்ளன. பெரியபாளையம் பவானியம்மன் கோவிலில் 125 கோடி ரூபாய் மதிப்பில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும்.

தமிழகத்தில் பக்தர்கள் அதிகம் வரும் 553 கோவில்களை மேம்படுத்துவதற்கான வரைவு திட்டம் தயாரிக்கப்படும்; 300 கோவில்களின் திருப்பணி துவங்கி, ஓராண்டில் கும்பாபிஷேகம் நடத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.இந்நிகழ்ச்சியில், அறநிலையத் துறை கமிஷனர் குமரகுருபரன், கோவில் இணை கமிஷனர் லட்சுமணன், எம்.எல்.ஏ., வேலு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X