சுவர் இடிந்து விழுந்ததில் கர்நாடகாவில் 7 பேர் பலி

Added : அக் 07, 2021
Share
Advertisement
பெலகாவி:கர்நாடகாவின் பெலகாவியில், மழைக்கு வீட்டு சுவர் இடிந்து விழுந்ததில் ஏழு பேர் இறந்தனர்.பெலகாவி அருகே உள்ள படாலா அங்கலகி கிராமத்தை சேர்ந்தவர் அர்ஜுன் ஹனுமந்தா, 58. இவர் தன் வீட்டை புதுப்பித்து வருகிறார். இதனால் வீட்டின் அருகில் கூடாரம் அமைத்து குடும்ப உறுப்பினர்கள் தங்கி உள்ளனர்.புதுப்பிக்கப்படும் வீட்டின் கூரை அமைக்கும் பணி நடந்து வருகிறது.இந்த வீட்டின்

பெலகாவி:கர்நாடகாவின் பெலகாவியில், மழைக்கு வீட்டு சுவர் இடிந்து விழுந்ததில் ஏழு பேர் இறந்தனர்.

பெலகாவி அருகே உள்ள படாலா அங்கலகி கிராமத்தை சேர்ந்தவர் அர்ஜுன் ஹனுமந்தா, 58. இவர் தன் வீட்டை புதுப்பித்து வருகிறார். இதனால் வீட்டின் அருகில் கூடாரம் அமைத்து குடும்ப உறுப்பினர்கள் தங்கி உள்ளனர்.புதுப்பிக்கப்படும் வீட்டின் கூரை அமைக்கும் பணி நடந்து வருகிறது.இந்த வீட்டின் சுவர்கள் சில நாட்களாக பெய்த பலத்த மழையால் நனைந்து ஈரமாக இருந்தது.

மேலும் நேற்றும் பலத்த மழை பெய்து கொண்டிருந்தது. மழை பெய்வதை குடும்ப உறுப்பினர்கள், சுவரின் அருகில் நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர்.அப்போது ஈரமாக இருந்த சுவர் இடிந்து விழுந்ததில் அர்ஜுன் ஹனுமந்தா, சத்யவ்வா அர்ஜுன்45, சவிதா பீமப்பா 28, லட்சுமி அர்ஜுன், 15, சத்யா பீமப்பா 18, பூஜா அர்ஜுன் 18, காசப்பா விட்டல் 18, ஆகிய ஏழு பேரும் உயிரிழந்தனர்.ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். இரண்டு பேர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X