ஆப்பிள் லோடுக்கு ரூ.10 லட்சம் தராமல் மோசடி: புதுச்சேரி வியாபாரி மீது வழக்கு பதிவு

Added : அக் 07, 2021
Share
Advertisement
புதுச்சேரி:கம்பம் பழ வியாபாரியிடம் 6 லோடு ஆப்பிள் வாங்கி ரூ. 10 லட்சம் பணம் தராமல் ஏமாற்றியதாக புதுச்சேரி வியாபாரி மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.தேனி மாவட்டம் கம்பம் காலவாசல் தெருவைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் 48; பழ வியாபாரி. இவரிடம் புதுச்சேரி பாரதி வீதி எஸ்.பி.என். பழ கமிஷன் மண்டி உரிமையாளர் சைமன்45. அறிமுகமானார்.கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்

புதுச்சேரி:கம்பம் பழ வியாபாரியிடம் 6 லோடு ஆப்பிள் வாங்கி ரூ. 10 லட்சம் பணம் தராமல் ஏமாற்றியதாக புதுச்சேரி வியாபாரி மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தேனி மாவட்டம் கம்பம் காலவாசல் தெருவைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் 48; பழ வியாபாரி. இவரிடம் புதுச்சேரி பாரதி வீதி எஸ்.பி.என். பழ கமிஷன் மண்டி உரிமையாளர் சைமன்45. அறிமுகமானார்.கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சைமன் தொலைபேசி மூலம் பன்னீர்செல்வத்தை தொடர்பு கொண்டு ஆப்பிள் வேண்டும் என கேட்டுள்ளார்.அதன்பேரில் சிம்லாவில் இருந்து ரூ. 76.41 லட்சம் மதிப்பில் 6 லோடு ஆப்பிளை சைமன் கடைக்கு பன்னீர்செல்வம் அனுப்பினார்.

இதற்காக ரூ. 66.09 லட்சம் கொடுத்த சைமன் ரூ. 10.32 லட்சம் தரவில்லை. பாக்கி தொகையை கேட்டபோது புதுச்சேரிக்கு நேரில் வருமாறு கூறியுள்ளார்.கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பன்னீர்செல்வம் தனது பங்குதாரர் மூர்த்தியுடன் புதுச்சேரிக்கு வந்து பணம் கேட்டார்.அவர்களை சைமன் ஆபாசமாக திட்டியதுடன் மிரட்டல் விடுத்துள்ளார். பன்னீர்செல்வம் பெரியக்கடை போலீசில் புகார் அளித்தும் வழக்கு பதிவு செய்யவில்லை.

இதனால் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம் பன்னீர்செல்வம் புகார் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது.அதைத் தொடர்ந்து நம்பிக்கை மோசடி ஆபாசமாக திட்டுதல் மிரட்டல் ஆகிய பிரிவின் கீழ் சைமன் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X