அரசியல் செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க., பொன் விழா தலைமை வேண்டுகோள்

Added : அக் 07, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை:அ.தி.மு.க., பொன் விழாவை, வரும் 17ம் தேதி சிறப்பாக கொண்டாடும்படி, தொண்டர்களுக்கு கட்சி ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.அவர்கள் அறிக்கை:எம்.ஜி.ஆரால் தமிழக மக்களுக்காக உருவாக்கப்பட்ட அ.தி.மு.க., 49 ஆண்டுகளைக் கடந்து, வரும் 17ம் தேதி, 'பொன் விழா' காண உள்ளது. இந்த திருநாளை கட்சியின் ஒவ்வொரு தொண்டரும்

சென்னை:அ.தி.மு.க., பொன் விழாவை, வரும் 17ம் தேதி சிறப்பாக கொண்டாடும்படி, தொண்டர்களுக்கு கட்சி ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அவர்கள் அறிக்கை:எம்.ஜி.ஆரால் தமிழக மக்களுக்காக உருவாக்கப்பட்ட அ.தி.மு.க., 49 ஆண்டுகளைக் கடந்து, வரும் 17ம் தேதி, 'பொன் விழா' காண உள்ளது. இந்த திருநாளை கட்சியின் ஒவ்வொரு தொண்டரும் மகிழ்ச்சியோடு கொண்டாட வேண்டிய நேரமிது.

இதையொட்டி, அமைப்பு ரீதியாக கட்சி செயல்பட்டு வரும் மாவட்டங்கள் சார்பில், ஆங்காங்கே அமைந்திருக்கும் எம்.ஜி.ஆர்., - ஜெயலலிதா சிலைகளுக்கும், அவர்களின் படங்களுக்கும் மாலை அணிவித்து சிறப்பிக்க வேண்டும்.மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, பகுதி, கிளை, வார்டு என அனைத்து இடங்களிலும், கொடிக் கம்பம் இல்லாத இடங்களில் கம்பம் நட்டு, புது வண்ணம் பூசி கொடியேற்றி, இனிப்பு வழங்க வேண்டும்.

புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மஹாராஷ்டிரா, கேரளா, டில்லி, அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும், கட்சியின் துவக்க நாளை சிறப்பாக கொண்டாட வேண்டும். அனைவரும், அரசு அறிவித்திருக்கும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.


முதல்வருக்கு கோரிக்கை

பன்னீர்செல்வத்தின் மற்றொரு அறிக்கை: துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அரசு மருத்துவமனையில், எக்ஸ்ரே எடுத்தோருக்கு, வெள்ளை தாளில் முடிவுகள் தரப்பட்டுள்ளன. நிதி பற்றாக்குறைதான் இதற்கு காரணம். இது, தவிர்க்கப்பட வேண்டும்.இரண்டாவது கருத்துரை வாங்கும் வகையில், வேறு ஒரு மருத்துவரிடம் காண்பிக்க வசதியாக, மக்களுக்கு எடுக்கப்படும் எக்ஸ்ரே முடிவுகள், படச்சுருளில் கொடுக்கப்பட வேண்டும். முதல்வர் இதில் தனிக்கவனம் செலுத்த வேண்டும்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vpurushothaman - Singapore,சிங்கப்பூர்
07-அக்-202114:25:31 IST Report Abuse
vpurushothaman இந்த சந்தர்ப்பத்தையும் கோட்டை விட்டு விடாதீர்கள். வீடுதோறும் சென்று பிரச்சாரம் செய்யுங்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X