சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தென்பெண்ணையில் ரசாயன நுரை தேக்கம்

Added : அக் 07, 2021
Share
Advertisement
ஓசூர்:ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நேற்று நீர்வரத்து 707 கன அடியாக அதிகரித்த நிலையில் தென்பெண்ணை ஆற்றில் ரசாயன நுரை தேங்கியது.கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு செப். 30 முதல் நேற்று முன்தினம் வரை தொடர்ந்து 328 கன அடி நீர்வரத்து இருந்தது. நீர்பிடிப்பு பகுதியான கர்நாடக மாநிலம் நந்திமலையில் பெய்த கனமழையால் நேற்று காலை அணைக்கு நீர்வரத்து 707 கன அடியாக
 தென்பெண்ணையில்  ரசாயன நுரை தேக்கம்

ஓசூர்:ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நேற்று நீர்வரத்து 707 கன அடியாக அதிகரித்த நிலையில் தென்பெண்ணை ஆற்றில் ரசாயன நுரை தேங்கியது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு செப். 30 முதல் நேற்று முன்தினம் வரை தொடர்ந்து 328 கன அடி நீர்வரத்து இருந்தது. நீர்பிடிப்பு பகுதியான கர்நாடக மாநிலம் நந்திமலையில் பெய்த கனமழையால் நேற்று காலை அணைக்கு நீர்வரத்து 707 கன அடியாக அதிகரித்தது.அணையின் மொத்த உயரமான 44.28 அடியில் 41.82 அடிக்கு நீர் இருந்ததால் தென்பெண்ணை ஆற்றில் 640 கன அடி நீர் திறந்து விடப்பட்டது.

நுங்கும் நுரையுமாக தண்ணீர் வெளியேறியது.பொதுவாக நீர்பிடிப்பு பகுதியில் கனமழையின் போது கர்நாடகா மாநிலத்தில் உள்ள தொழிற்சாலை மற்றும் குடியிருப்பு கழிவுகள் தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்படும். கெலவரப்பள்ளி அணையில் தேக்கி வைக்கப் படும் இந்த நீர் 500 கன அடிக்கு மேல் ஆற்றில் வெளியேற்றப்படும்போது ஆற்றில் ரசாயன நுரை ஏற்படும்.நேற்று அணையில் இருந்து 640 கன அடி நீர் வெளியேற்றப்பட்டதால் ஆறு மற்றும் பாசன வாய்க்கால்களில் அதிகளவு ரசாயன நுரை தேங்கி காற்றில் பறந்து துர்நாற்றம் வீசியது.

'இதுபோன்ற ரசாயன நுரையால் கால்நடைகள் குடிக்கக்கூட தண்ணீர் உகந்ததாக இல்லை' என விவசாயிகள் புலம்புகின்றனர்.


சுத்திகரிப்பு நிலையம்

சேலம் மாவட்டத்தில் நிலவும் சாயக்கழிவு நீர் பிரச்னையால் நிலத்தடி நீர் கடும் பாதிப்புக்கு உள்ளாகும் நிலை உள்ளது. இதற்கு தீர்வு காணும் வகையில் 150 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருப்பூரில் உள்ளது போல் சுத்தகரிப்பு நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது.

இது குறித்து சேலம் மாவட்ட சாயப்பட்டறை உரிமையாளர் சங்க இணைச் செயலர் சீனிவாசன் கூறியதாவது:சேலம் மாவட்டம் மாமாங்கத்தில் தனியார் மருத்துவமனை எதிரே 110 ஏக்கர் நிலத்தை ஒதுக்கீடு செய்ய சேலம் வந்த முதல்வரிடம் முறையிட்டோம்.

90 சதவீத சாய நீர் மறுசுழற்சி மூலம் மீண்டும் பயன்படுத்தப்படும்.மீதி 10 சதவீத நீரை ஆவியாக்கி தேங்கும் உப்பு படிமானத்தை அகற்ற அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய பொது சுத்திகரிப்பு நிலையம் திருப்பூரில் இருப்பது போன்று நிறுவ 150 கோடி ரூபாய் மதிப்பில் திட்ட மதிப்பீடு தயாராகிறது.

இன்னும் ஒரு மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு மேல் நடவடிக்கை இருக்கும். அதன்மூலம் 10 ஆயிரம் சாய உரிமையாளர்கள் பயன்பெறுவதோடு நேரடி மற்றும் மறைமுகமாக 10 ஆயிரம் தொழிலாளர்கள் பயன்பெறுவர்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X