தமிழ்நாடு

நிலக்கரி கையிருப்பில் தட்டுப்பாடு :அனல் மின் நிலைய உற்பத்தி பாதிப்பு

Updated : அக் 07, 2021 | Added : அக் 07, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களின் அனல் மின் நிலையங்களில் ஏற்பட்டுள்ள நிலக்கரி தட்டுப்பாடு, பல்வேறு தொழில் துறைகளிலும் பாதிப்புகளை ஏற்படுத்த துவங்கி விட்டது. இதனால் நம் அன்றாட தேவைகளும், வளர்ச்சியும் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக பொருளாதார வல்லுனர்கள் கணிக்கின்றனர்.இந்தியாவின் மொத்த மின் உற்பத்தியில், அனல் மின் நிலையங்களின் பங்களிப்பு கிட்டத்தட்ட 57 சதவீதம். நாடு
நிலக்கரி கையிருப்பில் தட்டுப்பாடு :அனல் மின் நிலைய உற்பத்தி பாதிப்பு

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களின் அனல் மின் நிலையங்களில் ஏற்பட்டுள்ள நிலக்கரி தட்டுப்பாடு, பல்வேறு தொழில் துறைகளிலும் பாதிப்புகளை ஏற்படுத்த துவங்கி விட்டது.

இதனால் நம் அன்றாட தேவைகளும், வளர்ச்சியும் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக பொருளாதார வல்லுனர்கள் கணிக்கின்றனர்.இந்தியாவின் மொத்த மின் உற்பத்தியில், அனல் மின் நிலையங்களின் பங்களிப்பு கிட்டத்தட்ட 57 சதவீதம். நாடு முழுதும் 135 அனல் மின் நிலையங்கள் இயங்குவதாக எரிசக்தி துறை தெரிவிக்கிறது. இதில், மின் உற்பத்தி தேவைக்காக, பொதுவாக 14 நாட்களுக்கான நிலக்கரி இருப்பு வைக்கப்பட்டிருக்க வேண்டும்.


latest tamil newsஆனால் தற்சமயம், 16 அனல் மின் நிலையங்களில் நிலக்கரி இருப்பே இல்லை. மற்றொரு 45 மின் நிலையங்களில் இரண்டு நாட்களுக்கான இருப்பே உள்ளது. மேலும் 26 நிலையங்களில் ஏழு நாட்களுக்கு தேவையான நிலக்கரி இருப்பே இருக்கிறது.நிலக்கரி உற்பத்தி குறைந்து போனதற்கு, நிலக்கரி சுரங்கப் பகுதிகளில் ஆக., -- செப்., மாதங்களில் பெய்த பெருமழையும், கொரோனா பெருந்தொற்றும் காரணங்களாக சொல்லப்
படுகின்றன. கொரோனா இரண்டாம் அலைக்கு பின், மின் தேவை அதிகமாகியுள்ள நிலையில், அனல் மின் நிலைய உற்பத்தியை உயர்த்த முடியவில்லை என்பது தான் பிரதான காரணமாக சொல்லப்
படுகிறது.

'கோல் இந்தியா' நிறுவனம் தான், நிலக்கரியை வெட்டியெடுத்து, அனல் மின் நிலையங்களுக்கு வினியோகித்து வருகிறது. ஆனால், ஒவ்வொரு ஆண்டும் அதன் இலக்கை அந்நிறுவனம் எட்டுவதே இல்லை. இந்தியாவின் மொத்த நிலக்கரி தேவையில் 63 சதவீதத்தை இந்நிறுவனமே நிறைவு செய்து தருகிறது. ஆனால், அந்நிறுவனத்தை மட்டுமே நம்பி இருந்ததால், மின் தேவை அதிகமாகும் போது, போதிய நிலக்கரியை வெட்டியெடுத்து அனுப்ப அந்த நிறுவனத்தால்
முடியவில்லை.

அனல் மின் நிலையங்களில் போதுமான நிலக்கரியை சேமித்து வைத்துக் கொள்ளும்படி, ஏப்., - ஜூன் மாதங்களிலேயே எரிசக்தி துறை முன்னெச்சரிக்கை விடுத்தது.
அனல் மின் நிலையங்களிடம் போதிய முதலீடு இல்லாததால், நிலக்கரியை சேமித்து வைக்க முடியவில்லை. கொரோனா இரண்டாம் அலை காலத்தில், எரிசக்தி துறையில் செய்யப்பட்ட முதலீடுகள் 15 சதவீதம் குறைந்து போனதால், மின் துறையில் இயங்கும் அனைத்து நிறுவனங்களுமே தேக்கத்தை சந்தித்தன.
மின் உற்பத்தி குறைந்து போனதால் நிலவும் பாதிப்புகள் தான் கவனிக்கத்தக்கன. உதாரணமாக, ஸ்டீல் ஆலைகளுக்கு தேவைப்படும் நிலக்கரி, ஒன்றுக்கு நான்காக விலை கொடுத்து வாங்கப்படுகிறது என தெரிவிக்கிறார், ஜிண்டால் ஸ்டீல் பவர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரான வி.ஆர்.சர்மா.
மேலும், ஒரு சில நிறுவனங்கள் தம் உற்பத்தியையே நிறுத்தும் சூழலும் ஏற்பட்டுள்ளது. இதே நிலை தான் அலுமினிய உற்பத்தியிலும் ஏற்பட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்று 80 டாலருக்கு மேல் விற்பனை ஆவதால், அங்கேயும் இந்தியாவுக்கு கூடுதல் செலவு. அதே சமயம், நுகர்வோருக்கும் பெட்ரோல், டீசல் விலை அதிகமாகவே இருக்கும் நிலை.இத்தகைய மின்சார பற்றாக்குறையை சமாளிக்க, அடுத்த சில மாதங்களுக்கு ஒரு சில உத்திகள் பின்பற்றப்படும் என தெரிகிறது. முதலில், கோல் இந்தியா நிறுவனம் தன் உற்பத்தியை, அக்., மத்தியில் இருந்து ஒவ்வொரு நாளும், 17 லட்சம் டன்னில் இருந்து 19 லட்சம் டன்னாக உயர்த்த உறுதி அளித்துள்ளது.

தற்சமயம், ஒவ்வொரு நாளும் அனல் மின் நிலையங்களுக்கு வழங்கப்படும் நிலக்கரியில் 60 - 80 ஆயிரம் டன் குறைவாகவே அனுப்பப்படுகின்றன. இந்த நிலை மாறும்போது மின் உற்பத்தி அதிகரிக்கும்.தேவைக்கேற்ப இந்தோனேஷியா, தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இருந்து நிலக்கரியை இறக்குமதி செய்து வருகிறோம். இந்தோனேஷிய நிலக்கரி, மார்ச் மாதத்தில் 1 டன் 60 டாலருக்கு விற்பனை ஆனது, தற்போது 270 டாலரைத் தொட்டிருக்கிறது. ஆனால், அவசர தேவைக்கு கூடுதல் விலை கொடுத்து இறக்குமதி செய்ய வேண்டியிருக்கலாம்.நாட்டின் பல பகுதிகளில் மழை நன்கு பெய்திருப்பதால், நீர் மின் நிலையங்களின் வாயிலாக மின்சார உற்பத்தி அதிகமாகும். இந்தியாவின் மொத்த மின் உற்பத்தியில் நீர் மின் நிலையங்களின் பங்களிப்பு 14 சதவீதம் என்பதால், மழையானது மின் தேவையை நிறைவு செய்யலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. - - நமது நிருபர் --

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
duruvasar - indraprastham,இந்தியா
07-அக்-202109:12:13 IST Report Abuse
duruvasar நிலக்கரி தட்டுபாடு இருப்பதால் அது தீரும் வரையில் மின்துறை அமைச்சர் பெருமானை எந்த நீதிமன்றமும் எந்த வழக்கிற்காகவும் ஆஜராக வற்றுபுறுத்தக்கூடாது. அப்படி செய்தால் அது மக்கள் நலனுக்கெதிரினாதாகவே கருதப்பட்டு போராட்டங்கள் வெடிக்கும் . சிங்கத்தை சீண்டாதீர்கள்.
Rate this:
Cancel
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
07-அக்-202108:03:47 IST Report Abuse
VENKATASUBRAMANIAN வேறு விவாதமாக நேற்று வந்தது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X