கோர்ட் செய்தி

தமிழ்நாடு

வாக்காளர் பட்டியலில் பள்ளி மாணவர்கள்? தகுதியானவர்கள் ஓட்டு அளிக்க அனுமதி!

Added : அக் 07, 2021
Share
Advertisement
சென்னை,:ஆவணங்களை சரிபார்த்து, தகுதியானவர்கள் ஓட்டு அளிக்க அனுமதிக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தாலுகா, ஈச்சன்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த, தமிழரசன் என்பவர் தாக்கல் செய்த மனு:வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில், என் பெயர், குடும்பத்தினர் பெயர் இடம் பெறவில்லை. எந்த விசாரணையும் இன்றி, எங்கள் பெயரை நீக்கி

சென்னை,:ஆவணங்களை சரிபார்த்து, தகுதியானவர்கள் ஓட்டு அளிக்க அனுமதிக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தாலுகா, ஈச்சன்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த, தமிழரசன் என்பவர் தாக்கல் செய்த மனு:வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில், என் பெயர், குடும்பத்தினர் பெயர் இடம் பெறவில்லை. எந்த விசாரணையும் இன்றி, எங்கள் பெயரை நீக்கி உள்ளனர். குறிப்பிட்ட வேட்பாளரின் துாண்டுதலின் பேரில், எங்கள் பெயரை, வருவாய் தாசில்தார் நீக்கி உள்ளார்.தகுதியானவர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கியதை எதிர்த்து, விழுப்புரத்தில் போராட்டம் நடத்தப்பட்டது. நீக்கப்பட்ட தகுதியான வாக்காளர்களுக்கு ஓட்டு உரிமை வழங்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனு, நீதிபதிகள் சிவஞானம், சத்திகுமார் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் மோகனகிருஷ்ணன் ஆஜராகி, ''தகுதியானவர்களை வேண்டுமென்றே நீக்கி உள்ளனர். பள்ளி மாணவர்களை, வாக்காளர் பட்டியலில் சேர்த்துள்ளனர். அவர்கள் ஓட்டுப் பதிவு செய்ய அனுமதிக்கக் கூடாது,'' என்றார்.

கிராம பஞ்சாயத்துக்கான ஓட்டுப் பதிவு துவங்கி விட்டதாக, அரசு பிளீடர் முத்துகுமார் தெரிவித்தார்.இதையடுத்து, ஓட்டுப் பதிவு துவங்கி விட்டதால், உத்தரவு பிறப்பிக்க முடியாது எனக் கூறிய நீதிபதிகள், ஆவணங்களை சரிபார்த்த பின், தகுதியுள்ளவர்களை மட்டுமே ஓட்டுப் பதிவுக்கு அனுமதிக்க வேண்டும் என, அறிவுறுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X