பொது செய்தி

தமிழ்நாடு

7.5 சதவீத ஒதுக்கீட்டில் கட்டணம் வசூலா? கல்லூரி அங்கீகாரம் ரத்து: அரசு எச்சரிக்கை

Added : அக் 07, 2021
Share
Advertisement
சென்னை:அரசின் 7.5 சதவீத ஒதுக்கீட்டில் சேர்ந்த மாணவர்களிடம் கட்டணம் வசூலித்தால், கல்லுாரி அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என, கல்லுாரிகளுக்கு உயர்கல்வித் துறை எச்சரித்துஉள்ளது. தமிழகத்தில் இன்ஜினியரிங், சட்டம், கால்நடை மருத்துவம், மீன்வளம் உள்ளிட்ட தொழிற் கல்வி படிப்புகளில், அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.இந்த ஒதுக்கீட்டில் சேரும்

சென்னை:அரசின் 7.5 சதவீத ஒதுக்கீட்டில் சேர்ந்த மாணவர்களிடம் கட்டணம் வசூலித்தால், கல்லுாரி அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என, கல்லுாரிகளுக்கு உயர்கல்வித் துறை எச்சரித்துஉள்ளது.

தமிழகத்தில் இன்ஜினியரிங், சட்டம், கால்நடை மருத்துவம், மீன்வளம் உள்ளிட்ட தொழிற் கல்வி படிப்புகளில், அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

இந்த ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கு, அனைத்து வகை கட்டண செலவையும் அரசே ஏற்கும் என, முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.இந்நிலையில், இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில், 7.5 சதவீத ஒதுக்கீட்டில் சேர்ந்துள்ள மாணவர்களிடம், கல்வி கட்டணம் செலுத்தவும், அரசிடமிருந்து நிதி வரும் வரை முன்தொகையாக பாதி கட்டணமாவது செலுத்துமாறும், பல தனியார் இன்ஜினியரிங் கல்லுாரிகள் வற்புறுத்துவதாக, உயர்கல்வித் துறைக்கு புகார்கள் வந்தன.

இது குறித்து, உயர்கல்வி முதன்மை செயலர் கார்த்திகேயன் தலைமையில், மாணவர்களின் புகார்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டது.இதைத் தொடர்ந்து, தமிழக தொழில்நுட்ப கல்வி இயக்குனர் லட்சுமி பிரியா சார்பில், இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:

தமிழக அரசின், 7.5 சதவீத ஒதுக்கீட்டில் சேரும் அரசு பள்ளி மாணவர்களுக்கான கல்வி, விடுதி மற்றும் தகுதியான அனைத்து வகை கட்டணத்தையும் அரசே ஏற்கும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன்படி, அரசின் ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கான கல்வி கட்டணத்துக்கான நிதியை, அரசிடமிருந்து கல்லுாரிகள் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து, விரைவில் அரசாணை வெளியிடப்படும்.

எனவே, கல்லுாரிகளில் இருந்து, மாணவர்களிடம் எந்தவித கட்டணமும் வசூலிக்கக் கூடாது. ஏதாவது வசூலித்திருந்தால், அந்த கட்டணத்தை உடனடியாக மாணவர்களிடம் திருப்பித் தர வேண்டும். இந்த உத்தரவை மீறி, மாணவர்களிடம் கட்டணம் வசூலித்தால், சம்பந்தப்பட்ட கல்லுாரிகளின் அங்கீகாரம் மற்றும் இணைப்பை ரத்து செய்ய, அண்ணா பல்கலை மற்றும் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் வழியே நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X