சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருட்டு: வெளிச்சத்துக்கு வந்த போலி நகை விபரம்

Added : அக் 07, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
தர்மபுரி:அன்னசாகரம் விநாயகர் சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடந்த கொள்ளை சம்பவத்தால் கோயிலில் போலி நகைகள் இருந்தது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.தர்மபுரி அன்னாகரத்தில் ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது விநாயகர் சிவசுப்பிமணிய சுவாமி கோயில். அர்ச்சகர் தண்டபாணி 60 நேற்று முன்தினம் இரவு பூஜை முடித்து விட்டு கோயிலை பூட்டிச் சென்றார். நேற்று காலை 6:30
 சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருட்டு: வெளிச்சத்துக்கு வந்த போலி நகை விபரம்

தர்மபுரி:அன்னசாகரம் விநாயகர் சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடந்த கொள்ளை சம்பவத்தால் கோயிலில் போலி நகைகள் இருந்தது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

தர்மபுரி அன்னாகரத்தில் ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது விநாயகர் சிவசுப்பிமணிய சுவாமி கோயில். அர்ச்சகர் தண்டபாணி 60 நேற்று முன்தினம் இரவு பூஜை முடித்து விட்டு கோயிலை பூட்டிச் சென்றார். நேற்று காலை 6:30 மணிக்கு கோயிலை திறந்தபோது பீரோக்கள் உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தன.

அவரது தகவலின்படி ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் பிரகாஷ்,செயல் அலுவலர் விமலா, தர்மபுரி டவுன் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் கோவிலுக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.விசாரணையில் கோவிலில் இருந்து சிகப்பு கல் பதித்த நான்கு வெள்ளிக்கீரிடம் உட்பட 21.79 கிலோ வெள்ளி பொருட்கள்,3தங்கத்தாலி திருடுபோனதாக கூறப்பட்டது.

ஆனால்கோயிலில் இருந்தகிரீடங்கள்,தங்கத்தாலி போலியானது என்பது அதிகாரிகளை அதிர்ச்சியடைய வைத்தது.அறநிலைத்துறை பதிவேட்டில் உள்ளதை விட கோயிலில் கூடுதலாக வெள்ளி, தங்க பொருட்கள் இருந்தன. போலீசாருக்கு கணக்கு காட்ட முடியாமல் அறநிலையத்துறையினர் திணறியதால் மாலை 5:30 மணி வரை புகார் தெரிவிக்கவில்லை. அறநிலையத்துறை உதவி ஆணையரை அலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது ''கோயிலில் நகைகள் பதிவேட்டின் படி ஆய்வு செய்யப்பட்டது. போலி நகையாக இருக்க வாய்ப்பில்லை. செயல் அலுவலர் விமலா மூலம்புகார் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது'' என்றார்.

கொள்ளையடித்த மர்ம நபர்கள் கண்காணிப்பு கேமரா ஹார்டு டிஸ்கை அகற்றி அதை தண்ணீர் தொட்டியில் வீசி சென்றுள்ளனர்.திருதொண்டர் சபை நிறுவன தலைவர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:இந்த கோயில் சொத்துகள்குறித்து 2014ல் ஆர்.டி.ஓ. உள்ளிட வருவாய்த் துறையினர்,ஹிந்து சமய அறநிலையத் துறையினர்,போலீசார் நில அளவை பிரிவு உள்ளிட்ட அனைத்துத்துறை அதிகாரிகளுடன் கணக்கெடுக்கப்பட்டது.

ஆனால் இதுவரை ஆக்கிரமிப்பு சொத்துக்கள் கையப்படுத்தவில்லை. நேற்றுகாலை 6:30 மணிக்குகொள்ளை குறித்துஹிந்து சமய அறநிலையத்துறையினருக்கு தகவல் தெரிந்தும் பிற்பகல் 3:30 மணி வரை போலீசில் புகார் அளிக்கவில்லை. இங்குள்ள நகைகளை உரிய முறையில் சோதனை செய்ய வேண்டும். முறைகேடுகள் இருந்தால் தவறு செய்தவர்கள், துணை சென்றவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
John Miller - Hamilton,பெர்முடா
07-அக்-202123:52:57 IST Report Abuse
John Miller தினமும் திருச்செந்தூர் முருகன் கோவிலில் முகமூடி போடாமலே அங்குள்ளவர்கள் திருடிக்கொண்டு இருக்கின்றார்கள்.
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
08-அக்-202108:54:31 IST Report Abuse
 Muruga Velபோப் வருத்தப்படற சின்ன பசங்க சமாச்சாரம் மாதிரி சர்வ சாதாரணமா சொல்றீங்க...
Rate this:
Cancel
திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானதேசிகன் நகையெல்லாம் உருக்க கூடாதுன்னு கோர்ட்டுக்கு போறாங்களே அது ஏன்னு இப்பதானே புரியுது கணம் கோர்ட்டார் அவர்கள் அந்த கேஸை DISMISS BEFORE ADMISSION என வேண்டுகிறேன்
Rate this:
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
07-அக்-202110:59:44 IST Report Abuse
vbs manian போலி நகைகளை யார் வைத்தார்கள். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.
Rate this:
R MANIVANNAN - chennai,இந்தியா
07-அக்-202116:50:52 IST Report Abuse
R MANIVANNANவெளியில் இருந்துதான் யாரோ வந்து வைத்துவிட்டு போயிருக்கிறாரகள்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X